அமேசான் ஃபிளிப்கார் தங்கள் சேவையை நிறுத்தியது | Amazon | Flipkart stop service
உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளிலே முடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்?
இந்தியா முழுவதும் அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்தியாவிசியமான காய்கறி, பால், மருந்துப்பொருட்கள் போன்றவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இந்தியா முழுவதும் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என ஆன்லைன் விற்பனை நிலையங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் முடக்கப்பட்டு உள்ள இந்த அசாதாரன சூழலில் மக்கள் எங்களைப் பெரிதும் நம்பி உள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலாக இருக்கிறது.
எங்கள் ஊழியர்களின் மீது நாங்கள் கவனம் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எனவே அடுத்த 21 நாட்களுக்கு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் இயங்காது என அந்நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமேசான் இந்தியா நிறுவனம் தங்களது இணையதளத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவிசய பொருடகள் மட்டும் கிடைக்கும் என்றும் டெலிவரி நேரம் முன்பை போல இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் பின்பு எப்போது சேவைகள் தொடங்கும் எனப் பிறகு அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.