அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
Tn Government Start Online Classes:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க இருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தொலைக்காட்சி பேட்டிக்குப் பதிலளித்த பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ஜூலை 13 முதல் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்புகள் இருந்தன. காரணம் தனியார் பள்ளிகளில் 2 முதல் 8 மணி நேரம்வரை வகுப்புகள் நடத்தப்படும்.
பின்பு இதற்குப் பள்ளிகளிலிருந்து கல்விக் கட்டணம் கேட்கப் படுகின்றன.
தமிழக அரசு ஏற்கனவே தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் அறிவித்திருந்தது.
கட்டணம் வசூலித்த பள்ளிகளின் மீது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் கல்விக் கட்டணத்தையும் தாமாக முன்வந்து கொடுக்க எந்தத் தடையும் இல்லை என்றும், கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த நிதியை 3 முதல் 4 மாதங்களுக்குப் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tn Private Tv Channels Telecast Online Classes:
பல மாணவர்களிடம் ஆன்ட்ராய்டு போன்கள் இருக்காது என்பதால் தனியார் தொலைக்காட்சி சேனல்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்தச் சேனல்கள் பொதிகை, பாலிமர், தந்தி, கல்வித் தொலைக்காட்சி, புதிய தலைமுறை.
தனியார் தொலைக்காட்சி சேனல்களில் ஒவ்வொரு சேனல்களிலும் ஒரு வகுப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களின் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.