இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி
நாடு முழுவதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதியளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் காரணமாக 10ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் முதலாமாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.
கல்லூரிகள் எப்போது திறக்கும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று கேள்விகள் எழுந்திருந்தது.
இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கொரோனா நோய் காரணமாக ஜூலை 31ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதையும் படிக்க: முதல் கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவதில் சிக்கல்
தற்போது மத்திய உயர்கல்வி துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் கல்லூரிகளில் இறுதியாண்டு மற்றும் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடப்பது உறுதியாகி உள்ளது.
பல்கலைக் கழக மானிய குழுவின் வழிகட்டுதல் படி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என ஒரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Useful news