உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவதில் சிக்கல்?
Zika virus மற்றும் chikungunya போன்ற வைரஸ்களுக்குத் தடுப்பு மருந்து உற்பத்தி செய்து உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யும் நிறுவனம் தடுப்பு மருந்து தயாரித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த Bharat bio tech நிறுவனம் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து (BBV152) தயார் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 15 தேதி தடுப்பு மருந்து மக்களிடம் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிப்பு வெளியாகியுள்ளது.
கோவாக்சின் (covaccine) எனப்படும் இந்தத் தடுப்பூசியை 2ம் கட்ட சோதனையாக வரும் 7ம் தேதி முதல் மனித மருத்துவ பரிசோதனையை ICMR, National Virology நிறுவனத்துடன் இணைந்து நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு மருந்து சோதனையைத் துரிதப்படுத்த Bharath bio tech நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் மருத்துவர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசு அவசர அவசரமாகத் தடுப்பு மருந்து சரியாகச் சோதனை செய்யாமலே மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் அது கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக ஒரு மருந்து தயாரிப்பதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் மூன்று கட்டங்களாகச் சோதனை செய்யப்பட்டு அதில் வெற்றியடைந்தால் மட்டுமே மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
முதல் கட்டமாகக் குறிப்பிட்ட நோயைச் சரிசெய்கிறதா? பக்க விளைவுகள் ஏதும் வருகிறதா என்று பார்க்கப்படும்.
இரண்டாவதாக அனைத்து தரப்பனருக்கும் ஏற்றதாக இருக்குமா என்று ஆராய்ச்சி செய்யப்படும்.
மூன்றாவது கட்டத்தில் விலங்குகளில் செலுத்தப்பட்டு வெற்றியடைந்தால், மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.
இது அனைத்திலும் வெற்றியடைந்தால் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் நேரத்தில் இந்தியா மருந்து கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.