கொரோனா அப்டேட் சுய ஊரடங்கு உத்தரவு | Full India Lock down 21 days

india 21 days lockdown


தமிழகத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்த நிலையில் இந்திய அரசு 21 நாட்கள் சுய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.

இந்தியா முழுக்க கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்க்கொண்டு வரும் நிலையில் நாடு முழுக்க 536 பேர் பாதிக்கப்பட்டும் 11 இறப்புகளும் தமிழகத்தில் முதல் இறப்பு மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார்.இது தமிழகத்தில் கொரோனாவின் முதல் உயிரிழப்பு.

இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்பவர்களைச் சுட்டுத்தள்ள போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்தையும் அழைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

Corona news

கொரோனாவைத் தடுக்க பயன்படும் சானிடைசர் முகமூடி போன்றவை தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இவைகளின் ஏற்றுமதியை மத்திய அரசுத் தடை செய்துள்ளது.

மேலும் எந்த வங்கி ஏடிஎம் லும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அதற்கு எந்தவித பிடித்தமும் செய்யப்படாது என்றும் மினிமம் பேலண்ஸ் பராமரிக்கத் தேவையில்லை என்றும் மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

2 thoughts on “கொரோனா அப்டேட் சுய ஊரடங்கு உத்தரவு | Full India Lock down 21 days

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *