சமூக வலைதளங்களில் வலைவிரிக்கும் MLM: மாட்டினால் உங்கள் பணம் கோவிந்தா

Fake MLM business

Multi Level Marketing on Social Media:

கொரோனா தொற்று நோய் காரணமாக இளைஞர்கள் முதல் பலர் வேலை இழந்து வீட்டில் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் சில பொய்யான போலி நிறுவனங்கள் Multi level Marketting (FTM EMEX International, RocketHub) எனக் கூறி அவர்கள் வலையில் சிக்க வைக்கின்றனர்.
Fake mlm
இது ஒன்றும் புதிய மோசடி இல்லை பழைய MLM தந்திரம் தான்.கொஞ்சம் முலாம் பூசி பட்டி டிங்கரிங் செய்து வந்துள்ளது.
முன்பு இருந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங்-ல் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை கட்ட சொல்வார்கள்.
பின்பு அந்தப் பணத்தின் கால் பாகத்தில் ஒரு பொருளைக் கொடுப்பார்கள்.பின்பு ஆள் சேர்க்க சொல்வார்கள்.

இப்போது வேலை இல்லாமல் இருப்பவர்களை ஏமாற்ற FTM EMEX International, RocketHub போலி நிறுவனங்கள் வந்துள்ளன.

Multi level marketing
இப்போது 2500 ரூபாய் பணம் கட்டனுமாம் அதற்கு 1000 ரூபாய்க்கான Recharge Voucher வருமாம்.
பின்பு சேர்த்துவிடும் ஒவ்வொரு ஆளுக்கும் 100 வீதம், சேர்த்து விட்டவர்களின் வங்கி கணக்கில்செலுத்தப்படுமாம்.

இவ்வாறு சேர்பவர்களுக்கு 1 முதல் 3 மாதங்கள்வரை பணம் கிடைக்கும் பின்பு அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த நிறுவனம் ஓடி விடும்.

இளைஞர்களை எப்படி MLM ல் சிக்க வைக்கிறார்கள்?

Costly bikes
புதிய ரக Royal Enfield, Yamaha, பைக்குகள் மற்றும் Benz, Audi போன்ற கார்களின் அருகில் நிற்பதும், புதிய உடைகள் அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து அதை Instagram, whatsapp, Facebook போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதும்.
இதனால் சிலர் என்ன வேலை செய்கிறாய் bike, car எல்லாம் வாங்கி இருக்கிறாய் என்று கேட்டதும் 2000 முதல் லட்சக்கணக்கில் பணத்தை invest செய்யனும், பிறகு 10 நபர்கள் சேர்க்க வேண்டும், பின் நீங்கள் படுத்துக் கொண்டே சம்பாதிக்கலாம் என்பது ஒரு வகை.
social media fake
சமூக வலைதளங்களில் சென்று குறிப்பிட்ட அளவு பணத்தை கட்டு பின்பு 5 நபர்களைச் சேர்த்து விடு பின் சேர்ந்தவர்கள் 5 பேரைச் சேர்த்து விடுவார்கள் நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறி சேரச் சொல்கிறார்கள்.
ஏற்கனவே போலி நிறுவனம் என்று தெரிந்தும் தங்களது நண்பர்களை ஏமாற்றுகின்றனர்.
scam MLM
இந்நிறுவனத்தில் பணத்தைக் கட்டி சேர்ந்தவுடன் மற்றவர்களையும் எளிமையாகச் சேர வைக்கப் போலியாக வங்கியில் பணம் போடப்பட்ட Mobile Sms-களை சேர்ந்தவர்களுக்குக் கொடுத்து இனி சேர்க்கும் நபர்களுக்குக் காட்டினால் எளிமையாக ஆள் சேர்க்க முடியும் எனக் கூறுகிறார்கள்.
இதனால் தங்களது நண்பர்களையும், தங்களை சேர்ந்தவர்களையும் ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு சேர்ந்தவர்கள் தங்களது நண்பர்களையும் சேர சொல்லி வற்புறுத்துவதும் பின்பு சேர்ந்து பணத்தை இழந்தவுடன் இவருவரும் சண்டை போட்டுப் பிரிந்து விடுவதும் இந்த ஏமாற்று வேலையில் காலம் காலமாய் நடந்து வருவதுதான் கொடுமை.
Fake mlm money
படித்த இளைஞர்களும் இதில் கொஞ்சம் கூட யோசிக்காமல் இறங்கி பணத்தை இழப்பது வருத்தமளிக்கிறது. 
யாரேனும் உங்களை இதுபோல business செய்யலாம் என்று அழைத்தால் company பற்றிய விவரங்களைக் கேட்க வேண்டும்.

பின்பு அந்த நிறுவனம் அரசு நிறுவனமா அல்லது அரசு அனுமதி அளித்த நிறுவனமா என்று கேட்க வேண்டும்.

RocketHub

யாராவது உங்களை வேலை BUSSINESS செய்யலாம் பணம் கொடு என்றால் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் உங்கள் பணம் திரும்பக் கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *