தோனி சகாப்தம்: இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தி

happy birthday dhoni

இந்திய அணியின் முன்னனி வீரர், வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 39 வதாவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்தியாவின் வெற்றி கேப்டனாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.
சிறுவயதில் தோனியின் ஆர்வம் பேட்மின்டன் மற்றும் கால்பந்து போட்டிகளில் இருந்தது.
குறிப்பாகக் கால்பந்து போட்டிகளில் அவர்தான் கோல்கீப்பர்.கால்பந்து போட்டிகளில் மாவட்ட மற்றும் கிளப் லெவல் போட்டிகளில் தேர்வு பெற்றார்.
அப்போதுதான் உள்ளூர் பயிற்சியாளர் கிரிக்கெட் விளையாட அனுப்பி வைத்தார்.
2007ல் டி20 உலகக்கோப்பை,2011 ல் 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013 ல் சாம்பியன்ஸ் கோப்பை இவரின் தலைமையின் கீழ் இந்திய அணி விளையாடி வென்றது.
உலகிலேயே மூன்று விதமான ICC உலகக்கோப்பைகளை  வென்று கொடுத்த CAPTAIN என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் தோனி.
முதல்முறையாக 2009ம் ஆண்டு ICC Test தர வரிசையில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
டிசம்பர் 23ல் 2004ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி ரன் எதுவும் அடிக்காமல் வெளியேறினார்.
M.S.DHONI
2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 148 ரன்கள் அடித்து விளாசினார்.அப்போதைய காலத்தில் விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன்கள் அதுதான் அதிகம்.
அதே ஆண்டில் இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் எடுத்து ஆட்டமிலக்காமல் தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்தார்.
இலங்கை அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியதால் 2005ம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கும் பதிலாகக் களமிறங்கினார்.
2007ம் ஆண்டு ராகுல் டிராவிட்டுக்கு பிறகு இந்திய ஒரு நாள் அணியை வழிநடத்தும் பொறுப்பு தோனியை தேடி வந்தது.
2008ம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.அதே ஆண்டு இலங்கை மற்றும் நியூசிலாந்துகளுக்கு இடையேயான போட்டிகளை இந்தியா வென்றது.
ஒருநாள் போட்டியின் கேப்டனாக 2007 முதல் 2016 வரை தோனி இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நாட் அவுட் ஆகாமல் அணிக்கு அதிக வெற்றியைப் பெற்றுத் தந்தவர்.
ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன்கள், கப்பில் தேவ்ற்கு பிறகு உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன்.
2007 முதல் 2016 வரை நடந்த ஆறு போட்டிகளுக்கும் தொடர்ச்சியாக அணியை வழி நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர்.
90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்கள் எடுத்துள்ளார்.அதிகபட்ச ரன்கள் 224. பேட்டிங் சராசரி 38.09 இதில் 33 அரை சதம் மற்றும் 6 சதங்கள் அடங்கும்.
350 ஒருநாள் போட்டிகளில் 10773 ரன்கள் எடுத்துள்ளார்.பேட்டிங் சராசரி 50.57 இதில் 73 அரை சதம் 10 சதங்கள் அடங்கும்.
98 T20 போட்டிகளில் 1617 ரன்கள் எடுத்துள்ள தோனி பேட்டிங் சராசரி 37.60 அதிகபட்ச ரன் 56 இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.
இறுதியாக 2019ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 72 பந்துகளில் 50 ரன் இருக்கும்போது ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அத்துடன் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.
அதன் பிறகு தோனி எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
2020 ம் ஆண்டு IPL ல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா நோய் காரணமாக IPL ம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
INDIAN CRICKETER DHONI
தோனி மைதானத்தில் கால் வைத்தவுடன் அரங்கமே தோனி தோனி என அதிரும்.அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரரான தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் Tamilnadu News Channel வலைதளம் பெருமை அடைகிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி.happy birthday dhoni.

One thought on “தோனி சகாப்தம்: இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *