11,500 கோடி ரூபாய் 36 லட்சம் பேருக்கு 2 மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது: தொழிலாளர் வைப்புநிதி அறிவிப்பு
11,500 கோடி ரூபாய் 36 லட்சம் பேருக்கு 2 மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது: தொழிலாளர் வைப்புநிதி அறிவிப்பு:
EPFO Latest Notification
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையிலும், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைச்சகம் (EPFO) 36 லட்சம் தொழிலாளர்களுக்கு முன்பணத்தை அளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே 2020 இரண்டு மாதங்களில் தன் உறுப்பினர்களுக்கு 11,500 கோடி வழங்கப்பட்டுள்ளது.
15 லட்சம் விண்ணப்பங்கள் மூலம் 4580 கோடி ரூபாய், பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா (PMGKY) திட்டத்தில் கீழ் சமீபத்தில் கோவிட்-19 முன் பணம் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
15,000 கீழ் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு இந்தக் கடினமான சூழலில் பணப்பிரச்சினைகளை தீர்க்க உதவியாக இருக்கும் என வருங்கால வைப்புநிதி அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த கோவிட்-19 முன் பணம் மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படியில் அடிப்படை ஊதியம் அல்லது அவரது கணக்கில் உறுப்பினரின் வைப்பில் 75% வரை, இதில் எது குறைவாக உள்ளதோ அது வழங்கப்பட்டது.
இதனால் பல தொழிலாளர்கள் கடனில் சிக்கிக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கால கட்டத்தில் மொத்த பணத்தையும் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களில் 74% மேலானோர் 15,000க்கு குறைவாக ஊதியம் பெற்றவர்கள் என் அவர்களின் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
Epfo 11,500 Crores 36 Lakh members Advance claim settled in 2 months
50,000 மேல் ஊதியம் பெற்றவர்களில் வருங்கால வைப்புநிதிக்கு விண்ணப்பித்தவர்கள் வெறும் 2% மட்டுமே.
தொழிளாலர் வைப்பு நிதிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தினமும் 270 கோடி வீதம் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.