Apple I Phone supplier Pegatron production comes to India from China

Pegatron shift china to india

World Top 3 mobile parts supplier pegatran production comes to india from china:

சென்னையில் Apple நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் வழங்கும் இரண்டாவது மிகப்பெரிய தொழிற்சாலை அமைய உள்ளது.

சீனாவின் மீது அமெரிக்க தொடுத்துள்ள வர்த்தக போர் காரணமாகச் சீனாவில் உள்ள பல நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.
அவ்வாறு வெளியேறும் பெரும்பாலான நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்வதற்காக 41,000 கோடி ரூபாய் ஊக்கத்தொகை (PLI) திட்டம் உள்ளிட்ட சலுகைகளை இந்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களைச் சென்னைக்கு மாற்ற முடிவு செய்து வருகின்றன.
இந்நிலையில் Apple I Phone நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் வழங்கும் இரண்டாவது பெரிய மற்றும் உலகின் மூன்றாவது பெரிய Mobile உதிரிபாகங்கள் வழங்கும் தைவானைச் சேர்ந்த Pegatron நிறுவனம் சீனாவிலிருந்து முழுவதுமாக வெளியேறி இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக முடிவெடுத்துள்ளது.
மேலும் இதையும் படிக்க:  Google CEO Sundar Pichai announces 💲10 Billion investment in India
இந்தியாவில் பல மாநில அரசுகளிடம் நிலம் தொடர்பான ஆலோசனைகள் செய்து தற்போது சென்னையில் நிறுவனத்தை நிறுவுவதற்கு முடிவு செய்து ஒப்பந்தங்களும் கையெழுத்து போடப்பட்டு விட்டது.
ஏற்கனவே தைவானைச் சேர்ந்த Faxconn நிறுவனம் சீனாவிலிருந்து வெளியேறிச் சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தொழிற்சாலையை 7500 கோடியில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்தது.
இந்த விரிவாக்கம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் Make in India திட்டத்தின் கீழ்  3 முதல் 5 ஆண்டுகளில் செய்யப்படுகிறது.
Pegatron நிறுவனத்தின் மொத்த மதிப்பு 45 மில்லியன் டாலர்கள் ஆகும்.இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப், டேப்லட், கணினிகள், கேம் கன்சோல்கள், மதர்போர்டுகள், வீடியோ அட்டைகள், எல்சிடி டிவிகள், தொலைக்காட்சி போன்றவற்றிற்கும் உதிரிபாகங்கள் தயாரித்து வருகிறது.
 ஏற்கனவே விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான், இன்வென்டெக் மற்றும் பெகாட்ரான் போன்ற பெரிய நிறுவனங்கள் சீனாவுக்கு வெளியே தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்துகின்றன. 
இதில் விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு பெங்களூரில் ஒரு தொழிற்சாலை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *