இயக்குனர் ராஜமெளலி நடிகர் அஜித்குமார் பற்றி பகிர்ந்த விஷயம் தற்போது வைரல்:
2022-ஆம் ஆண்டு ஆர்ஆர்ஆர் படம் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள இயக்குநர் ராஜமெளலி. ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள சினிமா 2022 ரவுண்ட் டேபிளில் நடிகர் அஜித் பற்றி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நடிகர் அஜித்குமார் பற்றி பேசினால் எந்தவொரு பிரபலமாக இருந்தாலும், அவருடைய ரசிகர்களின் கைதட்டல்கள் அள்ளும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஆனால், கைதட்டல்களை பெற வேண்டும் என்பதற்காக எல்லாம் ராஜமெளலி அஜித் பற்றி பேசவில்லை. உண்மையாகவே அஜித் செய்த அந்தவொரு விஷயம் தான் ராஜமெளலி அவர்களை அப்படி பேச வைத்துள்ளது என அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனலில் ராஜமெளலி பேச்சு:



ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமெளலியை ஒட்டுமொத்த உலகமே பாராட்டி வருகிறது. இந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார் ராஜமெளலி.
சமீபத்தில் ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனல் சார்பாக நடத்தப்பட்ட சினிமா 2022 ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிரித்விராஜ், ராஜமெளலி, கெளதம் மேனன் மற்றும் சீதா ராமம் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த ஆண்டில் சினிமாவில் நடந்த விஷயங்களை பற்றி பேசினர்.
இதில், நடிகர் அஜித் பற்றி ராஜமெளலி பேசியதை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சினிமாவில் முதலில் அதை உடைத்தவர் அஜித்:
கோல்டன் குளோப் விருது போட்டியில் பங்கேற்றுள்ள ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமெளலி பேசும்போது, ஒரு கால கட்டத்தில், ஹீரோன்னா ஹேண்ட்ஸம்மா இருக்கணும், டை அடித்து விட்டுத் தான் நடிக்கணும் என்கிற பழக்கத்தை தற்போது பல ஹீரோக்கள் மாற்றி உள்ளனர்.
ஹீரோவோட தலைமுடி நரைக்க கூடாது என இருந்த விதியை சினிமாவில் அப்படியொரு விதியை முதலில் உடைத்தவர் நடிகர் அஜித்குமார் தான் என ராஜமெளலி பேசியதை கேட்டதும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ராஜமெளலி அஜித்குமார் பற்றிய அந்த விஷயத்தை சொன்னதுமே உடனடியாக ‘ஆம்’ என தலையாட்டி ஆமோதித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலி அஜித் பற்றி பேசியதை கேட்ட ரசிகர்கள் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும் என கமெண்ட் போட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர்.