நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வாரம் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்யுடன், ரஷ்மிகா மந்தணா நடிகையாகவும் மேலும் பலர் நடித்துள்ளனர்.
வாரிசு படம் வெளியான அன்று நடிகர் அஜித்தின் துணிவு படமும் வெளியானது.இதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த வாரிசு படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும், குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
வெளியான 5 நாட்களிலேயே ரூ. 150 கோடி வசூல் செய்ததாக வாரிசு படக்குழு அறிவித்த நிலையில் கடந்த 7 நாட்களில் ரூ. 210 கோடி வசூல் செய்துவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது பொய் கணக்கா:
இந்த நிலையில், இது குறித்து பிரபல விநியோகஸ்தரும், தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
வாரிசு படம் ரூ. 200 கோடி வசூல் செய்ய 200 சதவீதம் வாய்ப்பே இல்லை. தனியாக ரிலீஸ் செய்திருந்தால் கூட பரவாயில்லை. துணிவு படமும் உடன் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
எனவே இவர்கள் சொல்லும் அளவிற்கு வாரிசு படம் 210 கோடி வசூல் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று அடித்து கூறியுள்ளார். இது கூறித்து திருப்பூர் சுப்பிரமணியன் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.