லவ் டுடே திரைப்படத்தின் கதை (Love Today Movie Review):
ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பிரதீப் ரெங்கநாதன் (உத்தமன் பிரதீப்) மற்றும் இவானா (நிகிதா) இருவரும் காதலிக்கின்றனர்.இருவரது காதலும் இவானாவின் அப்பா சத்தியராஜ் (வேறு சாஸ்திரி) தெரிய வர அவர் மறுநாள் உத்தமன் பிரதீப் பை வீட்டுக்கு அழைத்து வருமாறு நிகிதாவுக்கு கூறுகிறார்.
மறுநாள் உத்தமன் பிரதீப் வீட்டுக்கு வரும் போது என்னென்ன பேச வேண்டும் என போனிலே ஒத்திகை பார்த்துக் கொள்கிறார்கள்.ஆனால் நேரில் சென்று பார்க்கும் போது அவர்களது காதலுக்கு எந்த விதமான எதிர்ப்பும் கூறாமல் இருவரும் தங்களது மொபைலை ஒரு நாள் மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் ஒரு நாள் கழித்து இருவருக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லையெனில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி முடித்தார்.
இதனை இருவரும் ஏற்றுக் கொண்டு மொபைலை மாற்றிக் கொள்கிறார்கள்.அதன் பின்பு இருவருடைய மொபைலுக்குள் இருக்கும் விஷயங்கள் இருவருக்கும் தெரிய பெரிய கலவரமே உண்டாகி விடுகிறது.படத்தின் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படம்.
லவ் டுடே திரைவிமர்சனம் (Love Today Movie Review):
தற்போது உள்ள சூழ்நிலையில் மொபைல் தான் எல்லாம் என்றாகி விட்டது.அத்தியாவிசயமான செல்போன் தான் பல தேவையில்லாத விஷயங்களை கொண்டுள்ளது.இதனை தான் லவ்டுடே திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரெங்கநாதன் இப்படத்தின் மூலம் கூறியுள்ளார்.