பொன்னியின் செல்வன் – 2 : முதல் விமர்சனம்!!!

0
34
Ponniyin Selvan, Ponniyin Selvan - 2, Ponniyin Selvan 2 first review, Ponniyin Selvan Story, Ponniyin Selvan songs download,

Ponniyin Selvan – 2 : First Review!!!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.

இந்நிலையில் அப்படத்தின் இரண்டாவது பாகமான பொன்னியின் செல்வன்- 2 நாளை ஏப்ரல் 28 வெளியாக உள்ளது.

அமரர் கல்கி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வனை படமாக மாற்ற பல இயக்குநர்கள் மட்டுமல்லாமல் நடிகர்களும் முயன்றும் முடியாததை இயக்குநர் மணிரத்னம் நனவாக்கிய உள்ளார்.

பொன்னியின் செல்வன் கதை (Ponniyin Selvan Story)

சுந்தரச் சோழனின் மகன்களான ஆதித்ய கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மன் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் போர் செய்து வரும் நிலையில், அவர்களுடைய ஆட்சிக்குள் நடக்கும் வஞ்சக அரசியல் மற்றும் நந்தினியின் பழிவாங்க நினைக்கும் செயல்கள் காரணமாக ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட, அருள்மொழி வர்மனிடம் செல்லும் மணிமகுடத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா? அல்லது ஏற்கவில்லையா என்பது தான் பிரமாண்டமான பொன்னியின் செல்வனின் கதை.

இந்த கதையில் தோழனாக வரும் வந்தியத்தேவன், அருள்மொழியின் அக்கா குந்தவை, பூங்குழலியின் உதவி, நந்தினி போன்ற உருவமுடைய ஊமை ராணி என ஏகப்பட்ட திருப்புமுனைகளுடன் விறுவிறுப்பாக அமைந்திருக்கும் பொன்னியின் செல்வன்.

5 புத்தகத்தில் உள்ள கதையை இரண்டு பாகத்தில் எடுப்பதே மிகப்பெரிய சவால் என்று கூறப்படுகிறது.ஆனால் முதல் பாகத்திலேயே மிகச்சிறப்பாக இயக்குநர் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளார்.எனவே நாளை வெளியாகும் இரண்டாம் பாகத்தில் இன்னும் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

  தேசிய விருதுகளை வாங்கி குவித்த சூரரைப்போற்று திரைப்படம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here