பொன்னியின் செல்வன் பாகம் 1
கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதியன்று வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.மூன்றாவது வாரத்திலும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.இன்னும் ஒரு சில நாட்களில் 500 கோடியை எட்டி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் பலரும் பொன்னியின் செல்வன் நாவலை படித்திருந்தாலும், அந்த நாவலில் வரும் கதை தெரிந்திருந்தாலும் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று முதல் பாகம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி
ஒரு சில பேட்டிகளில் பாகம் – 2ன் ரிலீஸ் எப்போது என்று இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்டபோது அவர் தேதி குறிப்பிடாமல் அடுத்தாண்டு வெளிவரும் என் கூறியிருந்தார்.
பொன்னியின் செல்லன் 1 நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து பொன்னியின் செல்வன் 2 வது பாகத்தின் எடிட்டிங் மற்றும் வி.எப்.எக்ஸ் வேலைகளை வேகமாக முடிக்குமாறு தனது குழுவினருக்கு உத்தவிட்டுள்ளாராம்.
இந்நிலையில் தற்போது உள்ள தகவல்களின் படி பொன்னியின் செல்வன் பாகம் 2 அடுத்த வருடம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.