துணிவு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார்,எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மாறுபட்ட இரண்டு தோற்றங்களில் அஜித் நடித்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
Thunivu Update:
இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து டப்பிங் மற்றும் படவெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Thunivu Second Single:
ஏற்கனவே இசையமைப்பாளர் தமன் இசையில் நடிகர் சிம்பு பாடிய சில்லா சில்லா பாடல் வெளியாகி மாஸ் ஹிட் அடித்துள்ளது.
Thunivu Second Single Release Date:
இந்நிலையில் துணிவு படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் செகண்ட் சிங்கிள் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது