Thunivu Second Single Released:
அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு திரைப்படம் 2023-ல் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற தென்னிந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகும்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத்தை புதிய அவதாரத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை உண்டாக்கி 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
தற்போது படக்குழுவினர் துணிவின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளாடா பாடலை இன்று வெளியிட்டனர். இப்பாடலை வைசாக் வரிகளில், மஞ்சு வாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடியுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளரான போனி கபூர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த பாடலைப் பற்றிய புதுப்பிப்பை பகிர்ந்துகொண்டு, “பணத்தின் சக்தியை அனுபவிக்கத் தயாராகுங்கள்! காசேதான் கடவுளடா என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
துணிவு ஒரு ஆக்ஷன்-த்ரில்லர், இதில் அஜித் குமார் புதிய அவதாரத்தில் நடித்துள்ளார். துணிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் (2019) படத்திற்குப் பிறகு மலையாள நடிகையின் இரண்டாவது தமிழ்த் திரைப்படம் இது.
துணிவு திரைப்படத்தின் முக்கிய பகுதிகள் ஹைதராபாத் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு வினோத்துடனும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு.