அஜித்குமார் நடிப்பில் துணிவும், விஜய்யின் நடிப்பில் வாரிசும் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.மேலும் இரு படத்தின் ப்ரோமோஷன்களும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வாரிசு தரப்பில் ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்களும் துணிவு தரப்பில் சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா பாடல்களும் வெளியாகி இரு தரப்பு ரசிகர்களுக்கும் விருந்து படைத்தன.
இந்நிலையில் துணிவு படத்தின் மூன்றாவது பாடல் கேங்ஸ்டா என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் வரும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.மேலும் இப்பாடலை பாடகர் சபீர் பாடியுள்ளார்.