பொதுவாக பண்டிகை விடுமுறை நாட்களை குறிவைத்து அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகும்.
வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன.
தமிழகத்தில் ரிலீஸ் தேதி தற்போது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் வெளிநாடுகளில் இந்த இரண்டு படங்களுக்கும் முன்பதிவு தொடங்கிவிட்டது.அதன்படி ஜனவரி 12ம் தேதி தான் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தியேட்டர்களில் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பிக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆனால் 12ம் தேதி பண்டிகை தினம் இல்லை என்பதால் அந்த தேதியில் 5 காட்சிகள் போட அனுமதி கேட்டு அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.
ஜனவரி 12 , 13 மற்றும் 18 ஆகிய நாட்களில் மட்டும் கூடுதல் காட்சி திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.