நடிகர் அஜித் குமார் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு எப்போது என்று இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
துணிவு திரைப்படம்:
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.அதன் பிறகு அதே இயக்குனரின் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 11 தேதி இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்தது.இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த நேரத்தில் துணிவு திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இயக்குனர் வினோத் அண்மையில் இசையமைப்பாளர் ஜிப்ரானை சந்தித்து பேசியுள்ளார்.அப்போது துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் அப்டேட் பற்றி பேசியுள்ளனர்.இது குறித்து ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை பகிர்ந்துள்ளார்.இதனை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.