Corona virus | Corona virus 144 restraining order Tamil Nadu
Corona virus 144 restraining order Tamil Nadu
தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஆறு மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் என்னவெல்லாம் இயங்கும், என்னவெல்லாம் இயங்காது?
முதன்முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் டிசம்பர் 2019 அடையாளம் காணப்பட்டு தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (WHO) மூலம் 2020 மார்ச் 11 அன்று அறிவிக்கப்பட்டது.
இந்த வைரஸ் பொதுவாக இருமலின்போது உருவாகும் சுவாசத்துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
பல்வேறு நாடுகளில் இந்த நோய் பரவியுள்ள நிலையில் ஒவ்வொறு நாடும் அங்கு உள்ள நிலைமைக்கு ஏற்பப் பல்வேறு விதிமுறைகள் போட்டுள்ளது.பல சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
ஆகவே இந்திய அரசும் உள்நாட்டு விமான சேவையையும், இரயில் சேவையும் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல்1ம் தேதி காலை 6 மணிவரை 144 சட்டம் பிறப்பிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் கரோனா வைரசின் தொடர் சங்கிலி உடைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: IRCTC RESERVATION TICKET DON’T CANCEL
144 தடையின்போது எவை இயங்கலாம்:
- அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும்.
- மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஆக்ஸிஜன் சப்ளை செய்பவர்கள்
- மருந்து தயாரிப்பவர்கள், முகமூடி, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பவர்கள்
- மளிகைகடை, பால், அரிசிகடை போன்றவைகளும்
- வங்கிகள், ஏ டி எம், ஊடக நிறுவனங்கள் இயங்கலாம்.
- பெட்ரோல் எரிவாயு நிலையங்கள் ஆகியவை இயங்கும்.
- காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சிதுறை, தீயணைப்புதுறை தொடர்ந்து இயங்கும்.
144 தடையின்போது எவை இயங்க கூடாது:
- பொதுப்போக்குவரத்து, ஆட்டோ, டேக்சி போன்றவை
- ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைத் தொடர காவல்துறையின் அனுமதி தேவை.
நோய் பரவலை தடுக்க:
- முகமூடி (MASK) உபயோகிக்கவும்.
- வெளியில் சென்று வந்தவுடன் கைகளைக் கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.
- முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
Stay home
Thanks
Useful news