Government of Tamil Nadu releases 1018 English village names in Tamil Nadu with Tamil pronunciation
Government of Tamil Nadu releases 1018 English village names in Tamil Nadu with Tamil pronunciation
சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே இருந்த 1018 ஆங்கில ஊர் பெயர்களைத் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றி அமைத்துத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் சில ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒரு உச்சரிப்பாகவும் ஆங்கிலத்தில் ஒரு உச்சரிப்பாகவும் பேசப்படுகிறது.
உதாரணமாகச் சென்னை எழும்பூரை Egmore என்று அழைப்பார்கள்.தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உச்சரிப்பும் எழுத்தும் மாறுபடும்.
அதே போல் பூவிருந்தவள்ளி ponamalli என்றும் கோயம்புத்தூர் coimbatore என்றும் இதுவரை அழைக்கப்பட்டு வருகிறது.
இதுபோலப் பல ஊர்பெயர்கள் தமிழிழும் ஆங்கிலத்திலும் இரு பெயர்களால் அழைக்கப்படுவதால் பலர் குழப்பமடைகின்றனர்.
மேலும் இதையும் படிக்க: 11,500 கோடி ரூபாய் 36 லட்சம் பேருக்கு 2 மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது: தொழிலாளர் வைப்புநிதி அறிவிப்பு
இனி தமிழ் உச்சரிப்பில் தான் ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்க வேண்டும், மேலும் தமிழ் உச்சரிப்பில் தான் பெயர்களை எழுத வேண்டும் என்று தமிழக அரசானை வெளியிட்டுள்ளது.
இதே போல் மேலும் 1018 பெயர்களை மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
ஊர் பெயர்கள் | இதுவரை | இனிமேல் |
1.கோயம்புத்தூர் | Coimbatore | Koyampuththoor |
2.எழும்பூர் | Egmore | Elumpoor |
3. பூவிருந்தவள்ளி | Poonamalli | Poovirunthavalli |
4.மயிலாப்பூர் | Mylapor | Mayilapor |
5.தூத்துக்குடி | Tuticorin | Thoothukkudi |
தமிழ் வளர்ச்சித்துறையின் இந்த அறிவிப்புக்குத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.