அன்னாசிபழம் பிரேசில் நாட்டை பூர்வீகமாக கொண்டது.தற்போது அது பரந்து விரிந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படுகிறது.
இது ஒரு கோடைகால சீசனை கொண்ட பழம்.இதில் 131% வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு 74% உள்ளது.
அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்:
இதில் நார்ச்சத்து, புரோமிலைன், புரோடின், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், வைட்டமின் பி 5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு, ஃபோலேட் ஆகிய சத்துக்கள் உள்ளன.
அன்னாசி பழத்தின் நன்மைகள்:
அன்னாசியின் சிறப்பே இதில் உள்ள புரோமிலைன் என்ற சத்து தான்..
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வைட்டமின் C சத்து அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மேலும் நுண்ணுயிர் தொற்றுகள் உடலில் அதிகரிக்காமல் தடுக்கும்.
இதயத்திற்கு சிறந்தது
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்கும் இதனால் இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும்.மேலும் இரத்தம் சுத்தமாகும்.உடல் புத்துணர்ச்சி பெறும்.சருமம் பளபளக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும்
அன்னாசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
காயங்கள் விரைவில் குணமாகும்
அன்னாசிபழத்தில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள காயங்களை விரைவில் குணமாக்கும்.
மூட்டுவலி குறையும்
எழும்புகளின் தேய்மானத்தால் ஏற்படும் மூட்டுவலி குறையும்.
தொப்பை குறையும்
அன்னாசியுடன் ஓமப்பொடியையும் அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனை காலையில் பிழிந்து தினமும் குடித்து வர 15 நாட்களில் தொப்பை குறைய துவங்கும்.
செரிமான பிரச்சினை தீரும்
தினமும் இரண்டு துண்டு அன்னாசி பழம் சாப்பிட செரிமான பிரச்சினை தீரும்.
கண்பார்வை தெளிவாகும்
அன்னாசி பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் இளம் தலைமுறையினருக்கு கண் பார்வை திறனை மேம்படுத்தி , மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதை தடுக்கும்.
யார் அன்னாசி பழம் சாப்பிட கூடாது?
அன்னாசி பழத்தை அளவுக்கு அதிகமாக சப்பிடுவது உடல் சூடு அதிகரிக்க வழிவகுக்கும்.
இயற்கை சர்க்கரை அதிகம் இருப்பதால் இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது.
வலிப்பு நோய்க்கு தடுப்பு மருந்து சாப்பிடுபவர்கள் இதனை சாப்பிட கூடாது.
கர்ப்பினிகள் அதிகமாக சாப்பிட்டால் இதில் உள்ள புரோமிலைன் கருப்பையை பலவீனமானக்கி குறை பிரசவம் ஏற்பட வழிவகுக்கும்.ஏனவே மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து கொள்ள வேண்டும்.
பழுக்காத அன்னாசியை சாப்பிட்டால் அது உடலில் நச்சுத்தன்மையை அதிகப்படுத்தும்.