உலகில் உற்பத்தி செய்யப்படும் கொய்யாப்பழத்தில் 45% இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பழ வகைகளிலேயே மிகவும் விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியதுமான பழம் கொய்யா பழம்.
ஆனால் நமது ஊர்களில் வெளிநாட்டு பழ வகைகளுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தில் ஒரு சதவீதம் கூட நம் ஊர்களில் விளையும் கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை.இன்று வரை ஒரு கூடையிலோ அல்லது கூறு போட்டு விற்கும் நிலையில் தான் உள்ளது.
மற்ற அனைத்து பழ வகைகளை காட்டிலும் அதிக சத்துக்களை கொண்டது நம் ஊர் சிவப்பு கொய்யா பழம்.
தேசிய உளவியல் ஆராய்ச்சி கழகம் சார்பில் உலகில் உள்ள அனைத்து பழ வகைகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டதில் அதிக அளவில் சத்துக்களை கொண்டு முதல் இடத்தை பிடித்த பழம் நமது சிவப்பு கொய்யா பழம் தான்.
கொய்யா பழம் இந்தியா, இலங்கை மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.கொய்யா பழம் மட்டுமல்ல, அதன் இலை மற்றும் பட்டை போன்ற உறுப்புகளும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
கொய்யா இலைகளை காய்ச்சி வாய் கொப்பளிக்க ஈறு வீக்கம் சரியாகும்.மேலும் இலைகளை அரைத்து உடலில் உள்ள புண்களின் மேல் வைக்க காயங்கள் குணமாகும்.
கொய்யாமரத்தின் பட்டைகள் வயிற்றுபோக்கை குணமாக்ககூடியது.
100கிராமுள்ள ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவதால் மூன்று நாட்களுக்கு நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி கிடைக்கும்.
கொய்யா பழத்தின் நன்மைகள்:



நமது உடல் வளர்ச்சிக்கும் எழும்புகளின் வளர்ச்சிக்கும் சிறந்தது கொய்யா பழம்.
தோல் வளர்ச்சியை நீக்கவும், முதுமையான தோற்றத்தை குறைத்து முகத்திற்கு பொலிவு தருவதற்கும் கொய்யாப்பழம் மிகச் சிறந்த தீர்வாகும்.
ஜீரண மண்டலம் பலம் பெறும்.வயிறு, இரைப்பை, மண்ணீரல், கல்லீரல் வலுப்பெறும்.மலச்சிக்கல் நீங்கும்.
கொய்யா பழத்தை சீராக சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாகும்.உடல் சூடு தணியும்.
புற்றுநோயை தடுக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-ன் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL-ஐ அதிகரிக்கும்.
பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தம் சீராகும்.வைட்டமின் A கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அடிவயிறு வலிக்கு கொய்யா இலைகளை காய்ச்சி அந்த நீரை குடிப்பதால் வலி குறையும்.
கடினமான உடல் உழைப்பு செய்த பிறகு நீங்கள் ஒரு கொய்யா பழத்தினை உட்கொண்டால் உங்களுடைய உடல் தசைகளுக்கு ஓய்வு கிடைக்கும்.
மது குடிக்கும் எண்ணத்தை குறைக்கும்.
கொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
- நார்ச்சத்து
- வைட்டமின் ஏ
- வைட்டமின் சி
- வைட்டமின் பி
- லைக்கோபீன்
- கால்சியம்
- மெக்னீசியம்
- இரும்புச்சத்து
- தாது உப்புக்கள்
யார் சாப்பிக்கூடாது? எப்போது சாப்பிட கூடாது?
வாதம், பித்தம் மற்றும் கபம் உள்ளவர்கள் சாப்பிட்டால் தலைசுற்றல் அதிகமாகும்.
கொய்யா பழத்தை இரவில் சாப்பிட்டால் வயிறு வலி ஏற்படும்.
சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் எடுத்துக் கொள்ள கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு சாப்பிட வேண்டும்.