தமிழர்களின் பாரம்பரிய உணவு அரிசி தான்:
தமிழர்களின் பாரம்பரிய உணவு அரிசி தான்.ஆனால் தற்போது அரிசி சோறு சாப்பிட்டால் சர்க்கரை வரும் என்று சப்பாத்தி சாப்பிட்டு கொண்டு உள்ளனர்.
நம்முடைய அரிசி என்பது பிறந்த குழந்தைக்கு கஞ்சி கொடுப்பது முதல் இறந்தவர்களுக்கு வாய்க்கரிசி வரை பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் வரக்கூடியது.
உமி, தவிடு, கரு, மாவுப் பொருள் இப்படிப்பட்ட நான்கு அடுக்குகளை கொண்டதுதான் அரிசி.ஆனால் இப்போது சோறு வெள்ளையாக வேண்டும் என்பதற்காக அதனுடைய கரு வரை தீட்டப்படுகிறது.மாவுப்பொருளை மட்டும் உணவாக சாப்பிட்டு கொண்டுவருகிறோம்.
தற்போது வருகின்ற அரிசியில் அதனுடைய மேல் தோல் தீட்டப்பட்டு அரிசியில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே வருகிறது.
நம்முடைய பாரம்பரிய அரிசிகளால் எந்தவித நோயும் வராது மேலும் நோய்களை குணப்படுத்தவே செய்யும்.
முன்பு வரை புற்றுநோய் நோய் எதனால் வருகிறது என்ற காரணம் தெரியாமல் இருந்தது.தற்போது மருத்துவ உலகம் நம்முடைய மரபு, சூழ்நிலை, மற்றும் பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மற்ற வெளிநாட்டு உணவுகளை சாப்பிடுவதால் தான் வருகிறது என்று கூறப்படுகிறது.நமது தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவுகளை நமது உடல் ஏற்றுக்கொள்ளும் மற்ற உணவுகளை ஏற்றுக் கொள்ளாது.
ஏன் கருப்பு கவுனி பயிரிடுவது நிறுத்தப்பட்டது?
நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகள் குறைந்தபட்ச அறுவடைகாலம் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகும்.1970 களின் இறுதியில் ஏற்பட்ட மக்கள்தொகை பெருக்கம் காரணமாக உணவுப்பற்றாக்குறை ஏற்படும் என்பதற்காக மரபனு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வகைகள் கொண்டுவரப்பட்டது.
இந்த மரபனு மாற்றம் செய்யப்பட்ட அரிசிகள் 90 நாட்களிலே அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மரபனு மாற்றம் செய்யப்பட்ட அரிசிகளுக்கு விவசாயிகள் மாறினர்.
இதனால் கருப்பு கவுனி மட்டுமல்ல நம்முடைய அனைத்து பாரம்பரிய அரிசிகள் அனைத்தும் பயிரிடுவது நிறுத்தப்பட்டது.
கருப்பு கவுனியில் உள்ள சத்துக்கள்:
கருப்பு கவுனியில் ஆந்த்தோசைனின் எனும் சத்துக்கள் உள்ளது இது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
அரிசி என்றாலே பலருக்கும் அதில் கார்போஹைட்ரேட் இருப்பது தெரியும்.ஆனால் உலகில் உள்ள அனைத்து அரிசி வகைகளை காட்டிலும் இதில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது.
இதுதவிர புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் B, வைட்டமின் E, ரிப்ளோவின், நியாசின் , லுபின், கால்சியம், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.
நாம் சாப்பிடும் உணவு செரிமானமடைய நார்ச்சத்து மிகவும் அவசியம் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
கவுனி அரிசியில் உள்ள நன்மைகள்:
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்தும்.நிறமி சத்துக்கள் மிகவும் அதிகம் இருப்பதால் கேன்சர் வராமல் தடுக்கும்.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப-பை புற்றுநோய் வராது.கவுனி அரிசியில் Fiber சத்துக்கள் உள்ளது.100 கிராம் அரிசியில் 4.9 கிராம் Fiber உள்ளது.
இரத்தசோகை குணமடையும்.உடலை எடை குறையும்.நம்முடைய உடலில் மன அழுத்தத்தை குறைக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தோல் அலர்ஜி போன்ற உடலில் ஏற்படும் அலர்ஜி களை தடுக்கும்.உடலில் உள்ள தேவையற்ற இரசாயன கழிவுகளை நீக்கும்.
கருப்பு கவுனி ஏன் தடைசெய்யப்பட்டது?
சீனாவில் இந்த கருப்பு கவுனியில் உள்ள நன்மைகள் தெரிந்து அங்குள்ள மன்னர்கள், அமைச்சர்கள், மற்றும் பண வசதி அதிகம் படைத்தவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் மற்ற மக்கள் அதனை பயிரிடுவதற்கும், சாப்பிட கூடாது என்றும் சட்டம் இருந்தது.அதனை மீறி சாப்பிடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்பட்டன.