காட்டு நெல்லி, அம்லா, ஆமலகம், கோரங்கம்,மிருதுபாலா, என்று பல்வேறு பெயர்களை கொண்டது நெல்லிக்காய்.
தமிழில் சங்க இலக்கியத்தில் ஔவைக்கு அதியமான் எனும் அரசன் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வைக்கும் நெல்லிக்கனியை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.அந்த அளவுக்கு நன்மைகளை கொண்டது பெரிய நெல்லிக்காய்.
இந்த நெல்லிக்காயில் வேறு எந்த பழங்களை காட்டிலும் அதிகமாக வைட்டமின் C உள்ளது.எனவே இது ஏழைகளின் ஆப்பிள் என்று நெல்லிக்காய் அழைக்கப்படுகிறது.மேலும் ஆயுளை அதிகரிக்கும் நெல்லிக்கனி என்றும் கூறப்படுகிறது.
என்னதான் ஆப்பிளுக்கு நிகராக நெல்லிக்காய் வர்னிக்கப்பட்டாலும் ஆப்பிளை காட்டிலும் அதிகமான சத்துக்களை நெல்லிக்காய் கொண்டுள்ளது.
தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
பெரிய நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் சி
- வைட்டமின் ஏ
- வைட்டமின் ஈ
- அயன்
- மெக்னீசியம்
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- பொட்டாசியம்
- காப்பர்
நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்:
வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.இரத்தத்தை சுத்தமாக்கும்.
சளி மற்றும் இருமலை குணமாக்கும்.வயது முதிர்வை குறைத்து என்றும் இளமையுடன் இருக்க வைக்கும்.
கண் பார்வை திறனை அதிகரிக்கும்.நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தசோகை வராமல் தடுக்கும்.
தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் அதனை கருமையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
சிறுநீர் கற்களை கரைக்கும்.மேலும் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் கல்லீரல் வைரஸ் தொற்று நீங்கி மஞ்சள்காமாலை வருவது தடுக்கப்படும்.
மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
உடலில் கால்சியம் பற்றாக்குறையால் எழும்புகள் தேய்மானம் அடைந்து மூட்டுவலி ஏற்படுகிறது.நெல்லிக்காயில் உள்ள கால்சியம் எழும்பு தேய்மானத்தை சரிசெய்யும்.
யார் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்?
நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இவை இரத்தக் குழாய்களின் மீட்சித் தன்மையை அதிகரித்து, இரத்த ஒட்ட பாதையை அகலப்படுத்தி அழுத்தம் இல்லாமல் இரத்தம் செல்ல உதவுகிறது. ஆனால் அதே நேரத்தில் இரத்தம் உறைவதை தடுக்கும் மாத்திரைகளை சாப்பிட்டு வருபவர்கள் நெல்லிக்காயை அதிகளவு எடுப்பது தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தி விடும். இதனால் இரத்தம் கசியத் தொடங்கும் அபாயம் ஏற்படலாம்.
இதில் அமிலத்தன்மை இருப்பதால் வெரும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இல்லையெனில் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துவிட வேண்டும்.
சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் அதிகமாக நெல்லிக்காய் சாப்பிடக்கூடாது.
இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களும் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.