பொதுவாகவே நம்மில் பலருக்கும் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது.ஒரு பொருள் உடலுக்கு நல்லது என்று யாராவது செல்லி எங்காவது கேள்விப்பட்டால் அதனை அளவுக்கு அதிகமாக சப்பிடுவது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உள்ளது.அதுபோல தான் அனைத்தும், குறைவாக எடுத்துக் கொண்டால் மருந்து அதையே அதிகமாக எடுத்துக்கொண்டால் விஷம்.
இந்தியாவில் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது.அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிமாக உள்ளது.பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதைக் காட்டிலும் பச்சையாக உண்பதால் அதில் உள்ள அனைத்து நலன்களும் நமக்கு கிடைக்கும்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ரச சோறு கொடுக்க சொல்வதற்கான காரணம் ரசத்தில் உள்ள பூண்டு தான்.
ஒரு சிலருக்கு உள் நாக்கு அளவுக்கு அதிகமாக வளர்ந்தால் அறுவை சிகிச்சை செய்யப்படும்.சீராக பூண்டை சாப்பிட்டு வர இந்த பிரச்சினை இருக்காது.
அதிகமாக எண்ணையில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் வெறுமனே இரண்டு பல் பூண்டு சாப்பிட்டால் செரிமானமாகிவிடும்.
ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினை மற்றும் ஆண்மை குறைவு ஏற்படுவதை குறைக்கும்.
பூண்டின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்:
- இதயத்திற்கு மிகவும் நல்லது.
- இரத்தக்கொதிப்பு சீராக இருக்கும்.
- கெட்ட கொழுப்பு குறையும்.
- செரிமானத்திற்கு சிறந்தது (ஜீரன மண்டலம் சீராகும்)
- நாம் உயிருடன் இருக்க முக்கியமாக தேவைப்படும் இரத்த வெள்ளையனுக்கள் அதிகமாகும்.
- இரத்த குழாய் அடைப்பை தடுக்கும்.
- உடல் எடையை குறைக்க உதவும்.
- உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
- தாய்ப்பாலை விருத்தி செய்யும்.
- ஊளை சதையை குறைக்கும்.
- மூட்டுவலி வராமல் தடுக்கும்.
- ஜீரன சக்தி அதிகரிக்கும்.
- வாயு கோளாறு நீங்கும்.
- எழும்பு, தசைகள் வலுப்பெறும்.
பூண்டு அதிமாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சினைகள்:
- இரத்தம் உறைதலை தடுக்கும்.
- கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.
- நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
- கர்ப்பிணிகள் பூண்டு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.