முக்கனிகளில் ஒன்றான பலா அளவிலும் பெரியதும், ருசியில் மிகச் சுவை மிகுந்தது இந்த பலா பழம் தான்.இதன் சுவை நாக்கில் மிகவும் தித்திக்கும்.மேலும் இதன் சுளையில் உள்ளே இருக்கும் விதையை பலரும் வெயிலில் காய வைத்து உணவில் சேர்த்துக் கொள்வது உண்டு.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் உள்ளூர்களிலே நல்ல விலை கொடுத்து வாங்கப்படுகிறது.மேலும் அதிக அளவில் பழனிக்கு பஞ்சாமிர்தம் செய்வதற்கு அனுப்பப்படுகிறது.
பலா பழம் மட்டுமல்ல பலா காயும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளபடுகிறது.
எந்தெந்த உணவுகளை சாப்பிட்ட பின் பலாபழத்தை சாப்பிட கூடாது
பால் குடிப்பதற்கு முன்பும் அல்லது பால் குடித்த பின்பும் இதனை சாப்பிட்டால் உடலில் வெண்புள்ளிகள் மற்றும் சொரியாசிஸ் ஏற்படும்.
பாலாபழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு இரட்டிப்பாகிவிடும்.
பலாவுடன் பப்பாளி சேர்த்து சாப்பிட கூடாது.ஏனெனில் இரண்டும் சூடான தன்மை கொண்ட பழ வகைகள்.
பலாபழத்தை சாப்பிட்டு விட்டு வெண்டைக்காயை சாப்பிட்டால் அது சருமப் பிரச்சினையை உண்டாக்கி விடும்.
முதியவர்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் உள்ளது.ஆனால் பலாபழத்தினை சாப்பிட்டு விட்டு வெற்றிலை போட்டால் அது ஒரு சில பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
பலாப்பழம் சாப்பிட்டு விட்டு Coca-cola அல்லது Pepsi குடித்தால் உயிர் போகிடுமா?
சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்ட செய்தி இதுதான். ஆனால் மருத்துவ ரீதியாக பலாபழத்தை சாப்பிட்டு விட்டு இதனை குடித்ததால் தான் உயிர் போனதாக எந்த விதமான ஆதாரங்களும் தற்போது வரை கிடையாது.