தேங்காய் நமது வாழ்வியலில் கடவுளுக்கு படைக்கும் பொருட்களில் முக்கியமானது.தேங்காயை உடைக்கும் பொழுது அதன் உள்ளே பூ இருந்தால் நல்ல சகுனம் என்று கூறுவார்கள்.
நன்கு முற்றிய தேங்காயை 3 முதல் 4 மாதங்கள் மண்ணில் புதைத்து வைத்தால் தேங்காய் முளை விட்டு வளர ஆரம்பித்திருக்கும்.இப்படி முளைத்த தேங்காயின் கரு பகுதி பூவாக வளர்ச்சிதை மாற்றம் அடைந்திருக்கும்.
இதனை தேங்காய் பூ, தேங்காய் சீம்பு, தேங்காய் கரு, Coconut apple, Sprouted coconut என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும்.
தேங்காயில் பல வகையான சத்துக்கள் இருந்தாலும் அதனை விட தேங்காய் பூவில் அதிமான சத்துக்கள் உள்ளன.எனவே இது Superfood என்றும் அழைக்கப்படும்.
தேங்காய்பூவில் வைட்டமின் சி, பி1,பி3,பி5,பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், அயன் போன்ற அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
தேங்காய் பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் மிக முக்கிய நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
Anti-viral, Anti-parasitic, Anti-fungal, Anti-bacterial போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.
செரிமான கோளாறுகள் நீங்கும்
தேங்காய் பூ அஜீரணம், அசிடிட்டி, வயிற்றுப்புண் போன்றவற்றை குணமாக்கும்.இது எளிதில் செரிமானமாகக் கூடிய பொருள் என்பதால் எந்த வயதில் உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
பொதுவாக தேங்காயை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள்.ஆனால் தேங்காய் பூ இன்சுலினை தூண்டி இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்.இதனால் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும்
Anti-cancer property’s அதிகமாக இருப்பதால் புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.
தைராய்டு சுரப்பை சீராக்கும்
ஒரு சிலருக்கு தைராய்டு சுரப்பு மிக குறைந்த அளவிலோ அல்லது மிக அதிக அளவிலோ சீரற்று சுரக்கும்.தேங்காய் பூ இதனை சீராக்கும்.
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
தேங்காய் பூ கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.மேலும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்படும்.
சிறுநீரக பிரச்சினைகளை குணமாக்கும்
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் தேங்காய் பூ.மேலும் சிறுநீரக தொற்றுக்கு எதிராகவும் செயல்படும்.
மாதவிடாய் கோளாறுகளை குணமாக்கும்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்கும்.
உடல் எடை குறைக்கும்
கலோரிகள் மற்றும் கொலஸ்டிரால் மிக குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும்.
சரும ஆரோக்கியம் மேம்படும்
Omega 3, Omega 6 எனப்படும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் செல்களுக்கு தேங்காய் பூ சிறந்தது.தேங்காய்பூ சாப்பிடுவதால் சருமம் பளபளக்கும், பொலிவு பெறும்.
சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளிகள், தேமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.