இந்த செய்தியில் ஆப்பிள் பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்…
யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களை பார்க்க செல்லும்போது ஆப்பிள் பழத்தை கட்டாயமாக வாங்கி செல்வோம்.அந்த அளவுக்கு ஆப்பிள் நம் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், உத்திர பிரதேச மலைகள் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில் அதிகமாக விளையக்கூடியது ஆப்பிள் பழம்.பொதுவாக மற்ற பழங்களை போல் அனைத்து இடங்களிலும் இதை விளைவிக்க முடியாது.இது குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதன் காரணமாகவே மற்ற பழங்களை காட்டிலும் விலை அதிகமாக உள்ளது.
ஆப்பிள் அதன் விலையைப் போலவே அதில் சத்துகளும் அடங்கி உள்ளன.இதில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 14% அத்தியாவசியமான வைட்டமின்கள் உள்ளன.
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லவே தேவையில்லை என்று சொல்லப்படுவதுண்டு.ஏனெனில் இதில் அந்த அளவுக்கு அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது.
மேலும் ஆப்பிள் சாற்றில் இருந்து தான், வீடுகளில் பயன்படுத்தப்படும் வினிகர் தயாரிக்கப்படுகிறது.
ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துக்கள்:
இதில் இரும்புச்சத்து, புரோட்டின், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலக் கள், உயிர்சத்துக்களான பி1,பி2, மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன.
ஆப்பிள் பழத்தில் உள்ள நன்மைகள் (benefits of Apple):
உடலில் இன்சுலின் சுரந்து இரத்த சர்க்கரை அளவு குறையும்.மேலும் இரத்த சோகை வராது.இரத்த ஓட்டம் சீராகும்.
வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சிக்கும், எழும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் பற்களின் உறுதிக்கும் உதவும்.
தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வர உடலில் வியர்வையினால் உண்டாகும் கெட்ட வாசனை வராமல் தடுக்கும்.
இதயநோய், புற்றுநோய், வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்கும், தூக்கம் நன்றாக வரும்.
ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்தி இதயத்தை சீராக இயங்க பேருதவி செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆப்பிளில் கலோரிகள் குறைவாக உள்ளதால் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களும் சிறிதளவு எடுத்து கொள்ளலாம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கல் கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும்.
இதில் உள்ள மாலிக் ஆசிட் இருப்பதால் பித்தப்பையில் பித்தகற்கள் உண்டாவது தடுக்கப்படும்.
இரவில் தூங்க செல்வதற்கு முன் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் உடல் எடை வெகுவாக குறையும்.
ஆப்பிளை எப்படி பார்த்து வாங்குவது? (Benefits of Apple)
பெரும்பாலான ஆப்பிள் விளைச்சல் காஷ்மீர் பகுதியில் செய்யப்படுகிறது.அங்கிருந்து எடுத்து வந்து வியாபாரம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும்.எனவே ஒரு சில வியாபாரிகள் அதன் மேல் பகுதியில் சிகப்பு நிறத்தில் உள்ள ஒரு வகையான மெழுகினை சேர்க்கிறார்கள்.இதை பார்த்து வாங்க வேண்டும் ஏனெனில் இந்த மெழுகு புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.