கொல்லாம் பழத்தின் நன்மைகள்:
முந்திரிபழத்தை சாப்பிடும் போது தொண்டையில் ஒரு விதமான கரகரப்பு தன்மை ஏற்படுவதால் பொரும்பாலானோர் இதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது.
ஆனால் நீங்கள் இந்த பதிவை முழுமையாக படித்தால், இனி அந்த தவறை செய்யமாட்டீர்கள்.அவ்வளவு நன்மைகளை கொண்டது முந்திரி பழம்.
முந்திரி பழத்தின் பூர்வீகம்:
முந்திரி பிரேசில் நாட்டை பூர்வீகமாக கொண்டது என்றாலும் இந்த பழத்தின் பலன் அறிந்து பல நாடுகளிலும் தற்போது பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் இப்பழம் போர்ச்சுக்கீசியர்களால் கோவாவுக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து இந்தியா முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.கடலூர் மாவட்டம் பன்ரூட்டி மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் முந்திரி பழம் என்று பரவலாக பலராலும் அழைக்கப்பட்டாலும் தென்மாவட்டங்களில் கொல்லாம் பழம் என்று அழைக்கப்படுகிறது.
முந்திரிபழத்தில் உள்ள சத்துக்கள்:
இதில் அதிகமாக வைட்டமின் சி சத்து மேலும் தயாமின், ரிபோஃப்ளோவின், நியாசின், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், நீர்ச்சத்து, டேனிஷ் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.
முந்திரி பழத்தின் நன்மைகள்:
ஆரஞ்சு பழத்தை விட ஐந்து மடங்கு வைட்டமின் சி சத்து உள்ளது.எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதய அரோக்கியத்திற்கு மிகச் சிறந்த பழம் இந்த கொல்லாம் பழம்.
பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் (High pressure) ஏற்படுவதை தடுக்கும்.
உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரிக்கும் கல்லீரலை சீராக வைத்துக் கொள்ளும்.
நுரையீரல் சீராக சுருங்கி விரிய உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் அதன் செயல்பாட்டை மேம்படுத்தும்.
காலை வெறும் வயிற்றில் முந்திரிபழத்தை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க உதவும்.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உடலில் எழும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.
கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய பருக்களை தடுக்கும்.
முந்திரி பழத்தில் உள்ள கரகரப்பு தன்மையை நீக்குவது எப்படி?
முந்திரி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு சாப்பிட்டால் அதில் உள்ள கரகரப்பு தன்மை நீங்கும்.