நம்முடைய தினசரி பழக்கவழக்கங்களில் காலை எழுந்ததும் டீ அல்லது காபி குடித்துவிட்டு தான் மற்ற வேலைகளை ஆரம்பிக்கிறோம்.பலருக்கு டீ குடித்தால் தான் காலை கடன்களே சரியாக முடிக்க முடியும்.
மேலும் சிலருக்கு காலை டீ அல்லது காபி குடிப்பத்தால் தான் புத்துணர்ச்சி ஏற்படும் என்று கூறுவார்கள்.ஆனால் இதனை குடிப்பதால் உடலுக்குள் ஏற்படும் பல விதமான பிரச்சினைகளையும், சிக்கல்களையும் பற்றி மருத்துவர்கள் கூறிகொண்டுதான் இருக்கிறார்கள்.
காலை வேளைகளில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடலில் பாக்டீரியாக்கள் உடலுக்குள் பரவ தொடங்கும்.இதனால் வளர்சிதை மாற்றம், வயிறு எரிச்சல், செரிமான கோளாறு போன்ற வயிற்று உபாதைகளும் ஏற்படும்.
எனவே காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக 1 கிளாஸ் அறை வெப்பநிலையில் உள்ள சாதாரண நீரை குடிக்கும் போது வயிறு சமநிலை அடையும்.ஆனால் நீங்கள் காஃபியோ, தேநீரோ குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.
தினமும் நீரை குடிக்கும் போது அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது.மேலும் வயிறு சுத்தமாகும்.