இந்த உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராமல் தடுக்கும்… Heart attack prevention foods in Tamil…

Heart attack prevention foods, heart attack prevention foods in Tamil

இந்த வகை உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள மாரடைப்பு வருவதை தடுக்க முடியும்… Heart attack prevention foods in Tamil

தற்போது உள்ள அவசர அவசரமான வாழ்க்கை முறை, கால நிலை மாறுபாடு, அதிக மன உளைச்சல் நிறைந்த வேலை மற்றும் உணவு பழக்கவழக்கங்களினால், மாரடைப்பு வருவது மட்டுமல்லாமல் வயது வித்தியாசமில்லாமல் இளம் வயதினருக்கும் மாரடைப்பு வருவது அதிகரித்து வருகிறது.

இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக சொல்லப்படுவது உடலில் உள்ள இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதும் மற்றும் தினசரி நாம் சாப்பிடும் உணவுகளில் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் மாரடைப்பு நோய் மிகவும் கொடியது.ஏனெனில் சரியான நேரத்தில், சரியான சிகிச்சை செய்ய தவறினால் வாழ்நாள் முழுவதும் உடல் முழுவதையும் முடக்கும் பக்கவாதம் அல்லது உயிரிழப்பு ஏற்படும்.

இந்த உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பை தடுக்கலாம் (Heart attack prevention foods in Tamil)

பச்சை காய்கறிகள் (Green vegetables):

எந்தவித பச்சை காய்கறிகளை எடுத்துக் கொண்டாலும் அதில் 5% நார்ச்சத்து உள்ளது.இந்த நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.

பெரிப்பழங்கள் (Berries):

பெரிப்பழங்களான Blueberry, strawberry மற்றும் crossberry போன்ற பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தக்குழாய்களில் உண்டாகும் இன்ஃப்ளமேஷன் மற்றும் கொழுப்புகள் படிவதை தடுக்கும்.

மீன் (Fish):

மீன்களில் ஒமேகா 3 எனப்படும் நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளன.இவை இரத்த குழாய்களில் உண்டாகும் கெட்ட கொழுப்பை குறைக்கும்.

பீன்ஸ் (Beans):

பீன்ஸ் வகைகளான சோயா பீன்ஸ், Black பீன்ஸ், Green பீன்ஸ் மற்றும் Kidney பீன்ஸ் வகைகளில் ஒரு வகையான ஸ்டார்ச் உள்ளது.இது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகிறது.இந்த நல்ல பாக்டீரியாக்கள் கெட்ட கொழுப்பை குறைக்கும்.

  தேங்காய் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...Amazing benefits of eating coconut flower...

ஆப்பிள் (Apple):

ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும்.

தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் 25% இதய நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கலாம்.

மாதுளை (Pomegranate fruit):

மாதுளை பழத்தை சாப்பிட்டால் இரத்த நாளங்களில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தை குறைத்து இரத்த நாளங்கள் சீராக சுருங்கி விரியவும்,உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்கிறது.

மாதுளையை அப்படியே உரித்து சாப்பிட்டாலும் அல்லது ஜீஸ் ஆக செய்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லது தான்‌.

பாதாம் பருப்பு மற்றும் வால்நட் (Almonds and walnuts):

உடலுக்கு நன்மை தரக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் உடலில் இரத்த நாளங்கள் படியும் கெட்ட கொழுப்பை குறைக்கும்.

இலவங்கப்பட்டை (Cinnamon):

காலம் காலமாக நாம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தி வரும் இலவங்கப்பட்டையை பொடியாக்கி தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

பூண்டு (Garlic):

இரத்த நரம்பு மண்டலம் சீராக சுருங்கி விரியவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் பூண்டு பெரிதும் பயன்படுகிறது.

வெந்தயம் (Fenugreek):

வெந்தயத்தில் 45% நார்ச்சத்து உள்ளதால் இரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை குறைக்கும்.

வெந்தயத்தை முந்தைய நாள் இரவு சிறிதளவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து வெந்தயத்தையும் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதையும், சர்க்கரை நோயினால் வரக்கூடிய இதயம் சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

Small Tips:

வேகமான வாழ்க்கை முறையால் துரித உணவுகளை சமைத்து சாப்பிடுவதை அல்லது கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, உடலுக்கு நன்மை தரக்கூடிய (Heart attack prevention foods in Tamil) உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

இந்த செய்தி பற்றிய உங்களுடைய கருத்துகளை கீழே கமெண்டில் தெரிவிக்கவும்…👇

siva

siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x