தமிழில் சங்க இலக்கியத்தில் “காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டு வந்தால் கோல் ஊன்றி நடந்தவனும் வாள் வீசி நடப்பான் மிடுக்காய்.”
இஞ்சி அதிகமாக விளைவிக்கப்படும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது இந்தியா.ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் இஞ்சி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.இஞ்சி பயன்படுத்துவதால் சளி, இருமல், மற்றும் அஜீரணம் சரியாகும்.
நாம் பேருந்து மற்றும் இரயில் பயணங்களில் இஞ்சி மொரப்பா விற்பதை பார்த்திருப்போம்.அதன் சுவை பலருக்கு பிடிக்காது.ஆனால் அதனை சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு பயணத்தின் போது ஏற்படும் வாந்தி, குமட்டல் வருவதை தடுத்து செரிமானத்தை அதிகப்படுத்தும்.
இஞ்சியின் மருத்துவ குணங்கள்:
இஞ்சியின் முக்கியமான குணம் வாந்தி, குமட்டல் வருவதை தடுக்கும்.
ஜீரண மண்டலத்தை சீராக்கும்.உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி சாற்றில் வெந்நீர் கலந்து குடித்துவர வயிறு சம்பந்தமான பல நோய்கள் தீரும்.
பால் அல்லது டீயில் இஞ்சி கலந்து குடித்தால் செரிமான கோளாறு நீங்கி பசியின்மை பிரச்சினை தீரும்.மலச்சிக்கல் சரியாகும்.
பல்வலி இருக்கும் இடத்தில் சிறு இஞ்சி துண்டை கடித்து அதன் சாற்றை இறக்க உடனடியாக பல்வலி தீரும்.
இஞ்சி சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் குறையும் இரத்தம் சுத்தமாகும்.பித்த தலைவலி நீங்கும்.
இஞ்சியை தொடர்ந்து ஒரு சீரான முறையில் எடுத்து கொள்ள உடலில் கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கும்.
இந்தியாவில் இஞ்சி அதிகம் விளைவிக்கப்படும் மாநிலம்:
கர்நாடகா
இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:
- சர்க்கரையின் அளவை குறைக்கும்.
- இரத்த கொதிப்பு குறையும்.
- இரத்தம் உறைதல் தன்மையை குறைக்கும்.
- வயதானவர்களுக்கு வரக்கூடிய அல்சைமர் எனும் ஞாபக மறதி குறையும்.
- வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயை குணப்படுத்தும்.
- கெட்ட கொழுப்பு குறையும்.
- பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய வாந்தியை குறைக்க இஞ்சியை பயன்படுத்தலாம்.
- உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகளுக்கு இஞ்சி பயனுள்ளதாக இருக்கும்.
யார் இஞ்சி சாப்பிடுவதை குறைக்க வேண்டும்:
தினமும் 5கிராமுக்கு மேல் இஞ்சியை உடலில் சேர்த்து கொள்வதால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படும்.
பெண்கள் பிரசவ காலத்தில் இஞ்சி சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.