மஞ்சள் தமிழர்களின் பாரம்பரிய கிருமிநாசினி:
பழங்காலத்தில் முதலில் தமிழர்கள் மஞ்சளை சாயப்பொருளாக பயன்படுத்தி வந்தனர்.பின்னர் தங்களின் விசேஷங்களுக்கும், சமையலுக்கும், முகத்திற்கு பொலிவு கொடுக்கவும், கிருமிநாசினியாகவும் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இது ஏழைகளின் குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது.கசப்பு தன்மையும், காரத்தன்மையும் கொண்டது.தமிழர்களின் குளியல் முறையில் பெண்கள் மஞ்சளை தேய்த்து குளிப்பது வழக்கம்.
மனித உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஏதோ ஒரு வகையில் மஞ்சள் நன்மை தரக்கூடியது.
இந்து மத சடங்குகளில் மஞ்சள் ஒரு மங்களமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது.உலக அளவில் மஞ்சள் தேவையை இந்தியா 80% தேவையை பூர்த்தி செய்கிறது.
தமிழ்நாட்டில் மஞ்சள் அதிகம் விளையும் மாவட்டம்?
தமிழகத்தில் அதிகப்படியான மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது.அதனால் இது மஞ்சள் நகரம் என அழைக்கப்படுகிறது.
மஞ்சளின் தாவரவியல் பெயர் என்ன?
குர்க்குமா லாங்கா
மஞ்சள் வகைகள்:
- முட்டா மஞ்சள்
- கரி மஞ்சள்
- விரளி மஞ்சள்
- கஸ்தூரி மஞ்சள்
- நாக மஞ்சள்
- குட மஞ்சள்
- குரங்கு மஞ்சள்
- காட்டு மஞ்சள்
- பலா மஞ்சள்
- மர மஞ்சள்
- ஆலப்புளி மஞ்சள்
மஞ்சளில் உள்ள சத்துக்கள்:
- புரதம்
- நார்ச்சத்து
- வைட்டமின் E
- வைட்டமின் K
- பொட்டாசியம்
- கால்சியம்
- துத்தநாகம்
- மெக்னீசியம்
- நியாசின்
- இரும்புச்சத்து
- செம்பு
- பாஸ்பரஸ்
மஞ்சளின் மகத்தான பயன்கள்:
குடலில் உண்டாகும் கேன்சர் செல்களை அழிக்கக்கூடியது மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள்.
குடலில் புண்கள், வாய்ப்புண் இருந்தால் மஞ்சளை பாலில் கலந்து குடித்துவர சரியாகும்.
நம் உடலில் புண்கள் இருந்தால் அதன்மீது மஞ்சளை தூவ Anti septic பண்புகள் மூலம் புண்கள் குணமாகும்.செரிமானம் சீராகும் குடல்வீக்கம் மற்றும் அல்சர் குணமாகும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.மஞ்சளை சுட்டு அந்த புகையை நுகர்வதால் மூக்கடைப்பு நீங்கும்.
மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காலில் தேய்த்து வர பாத வெடிப்பு சரியாகும்.பெண்கள் கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குளிப்பதால் கரும்புள்ளிகள், பருக்கள், கட்டிகள் போன்றவை வருவது தடுக்கப்படும்.
மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கும்.Cancer cell வளர்ச்சி தடுக்கப்படும்.இரத்த நாளங்களில் இரத்தம் உறைதல் தடுக்கப்படும்.
மஞ்சளை யார் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது:
கிட்னியில் கல் உள்ளவர்கள், பித்தப்பை கற்கள் அதிகம் எடுத்துக் கொள்ள கூடாது.
கர்ப்பினி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ள கூடாது.