மிளகு ஏன் கருப்பு தங்கம் என அழைக்கப்பட்டது?
பழங்காலத்தில் தற்போது உள்ளது போல் பணத்தை கொடுத்து வாங்கும் வழக்கம் இல்லை.பண்டமாற்று முறை தான் இருந்தது.
அந்த காலத்தில் வெளிநாட்டவர்களால் தங்கத்தை கொடுத்து மிளகை வாங்குவது வழக்கம் எனவே கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது.
மிளகின் வரலாறு:
முதன்முதலாக மனிதன் தோன்றிய கால கட்டத்தில் உணவில் மனிதர்கள் காயத்திற்கு பயன்படுத்தியது மிளகு தான்.பிறகு இடையில் வந்தது தான் மிளகாய்.
தமிழில் மிளகாய் என்ற சொல்லே மிளகில் இருந்து வந்தது தான். மிளகு+ஆய் = மிளகாய்
மிளகு சாதாரண காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை பலதரப்பட்ட நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் நலன்கள்:
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை உணவில் உள்ள மிளகை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு.
ஆனால் மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் அப்படி செய்ய மாட்டீர்கள்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- நீர் ஏற்றம், ஜலதோசம் நீங்கும்.
- மூட்டுவலி, தலைசுற்றல் ஆகியவற்றிற்கு சிறந்தது.
- வெண்டை (தோல்நோய்) நீங்கும்.
- கெட்ட கொலஸ்டிராலை நீக்கும்.
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மையை நீக்கும்.
- வாயு கோளாறுகள் அறவே வராது.
- ஈறு வீக்கம் மற்றும் பல்வலி வராது.
- பொடுகு தொல்லை குறையும்.
- இரத்த அழுத்தம் வராது.
- செரிமானத்தை அதிகப்படுத்தும்.
- பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சி சரியாகும்.
- உடலில் தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.
- நெஞ்சு சளி மற்றும் தொண்டைவலியை நீக்கும்.