வளைகுடா நாடுகளுக்கு இதை கொண்டு சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு சிறை தண்டனை உறுதி!!!

0
132
Opium seeds, Puppy seeds, கசகசா

நமது வீடுகளில் சமையலறையில் அஞ்சறை பெட்டியில் இருக்கக்கூடிய அற்பதமான பொருள் கசகசா.இது காரசாரமான உணவுகளில் ருசியை கூட்ட சேர்க்கப்படுகிறது.

காரசாரமான உணவுகளான மட்டன், சிக்கன் மற்றும் பிரியாணி போன்ற உணவுகளில் ருசியை கூட்ட பயன்படுத்தபடுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இது பயிரிடப்படுகிறது.

இந்தியாவில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது.

இதை சர்வசாதாரணமாக நெல், கோதுமை பயிரிடுவது போல் இதனை பயிரிட்டு விட முடியாது.இந்திய அரசின் கீழ் இயங்கும் Central board of Narcotics (CBN) இந்த அமைப்பு எந்தெந்த விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பயிரிட முடியும்.என்னதான் இவ்வளவு கட்டுப்பாடு இருந்தாலும் கள்ள சந்தைகளில் விற்கப்பட்டு கொண்டுதான் உள்ளது.

கசகசா 1 கிலோ 2500 முதல் ஒரு குவிண்டாலுக்கு 1 இலட்சம் வரை விற்கப்படுகிறது.

பண்டைய காலத்தில் எகிப்திய மக்கள் தங்களுடைய குழந்தைகளின் அழுகையை நிறுத்த பவுடராக்கிய கசகசா உடன் பால் மற்றும் தேன் சேர்த்து கொடுத்துள்ளார்கள்.

தற்போது அறுவை சிகிச்சை செய்யும் போது வலி இல்லாமல் இருக்க கசகசாவில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.

ஏன் வளைகுடா நாடுகளில் கசகசா கொண்டு செல்ல தடைவிக்கப்பட்டுள்ளது?

கசகசா, ஓபியம், opium seeds, Puppy seeds

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சமையலில் மிகவும் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய பொருள் கசகசா.

ஆனால் சவுதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில் கசகசா விதைகள் மூலம் முளைக்கும் செடிகளில் இருந்து போதை பொருள் எடுக்கப்படுவதால் அதனை அந்த நாட்டு அரசுகள் அதனை அங்கு கொண்டு செல்ல தடைவிதித்துள்ளனர்.

கனடா நாட்டில் இந்த கசகசா எவ்வாறு பார்க்கப்படுகிறது?

கனடா நாட்டில் கசகசாவின் (Opium poppy) பூவை அமைதிக்கான சின்னமாக அறிவித்துள்ளனர்.இறந்தவர்களின் சமாதி மீது கசகசா பூ வைக்கப்படுகிறது.இந்த பூ ஆழ்ந்த உறக்கத்தை குறிக்குமாம்.இந்த பூ சிகப்பு, ஊதா, மஞ்சள் என் மூன்று நிறங்களில் உள்ளன.

உலகிலேயே முதன் முதலில் நாணயங்களை சிவப்பு நிறத்தில் வெளியிட்ட நாடு கனடா.இந்த நாணயத்தில் கசகசா பூ தான் இடம்பெற்றுள்ளது.

கசகசாவில் போதைபொருள் எதில் உள்ளது?

கசகசா செடி முழுமையடையாமல் பச்சையாக இருக்கும் போது அதன் மேல் பகுதியில் உள்ள பை போன்ற அமைப்பை கீரும் போது அதிலிருந்து பால் போன்று வரும் அதன் பெயர் ஓபியம்.

  இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பயன்கள்!!! Important benefits of Ginger

இந்த ஓபியமானது, மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கொக்கைன், பிரவுன் சுகர் போன்று போதை தரக்கூடியது.

கசகசாவில் உள்ள மருத்துவ குணங்கள்:

கசகசாவை எடுத்துக் கொள்ள நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சினை தீரும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்‌.கண்பார்வை திறனை அதிகரிக்கும்.

மூளையில் நரம்புகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்த்து அதனை சிறப்பாக செயல்பட வைக்கும்.

ஆண்களின் பலவீணத்தை சரி செய்து ஆண்மையை அதிகரிக்கும.

எழும்பு தேய்மானத்தை சரிசெய்யும்.அறிவாற்றல் புத்திக்கூர்மை அதிகரிக்கும்.

பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு நீங்கி மாதவிடாயின் இறுதி நாட்களில் மன உளைச்சல், உடல் பலவீனம் இவை அனைத்தையும் சரி செய்யும்.

நல்ல உறக்கத்தை கொடுக்கும்.சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை தரும்.மலச்சிக்கலை தீர்க்கும்.

கண்பார்வை திறன் அதிகரிக்கும்.சளி மற்றும் வறட்டு இருமல் குணமாகும்.

உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here