நம்மில் பலர் மற்ற பழங்களை விரும்பி சாப்பிடுவது போல பப்பாளியை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை காரணம் எது ஒன்று எளிதாக கிடைக்கிறதோ அதனுடைய அருமை நமக்கு தெரியாது.
மேலும் பலர் எளிதாக கிடைக்கும் எந்த ஒரு பொருளிலும் சத்துக்கள் இருக்காது என்ற மனநிலையில் உள்ளனர்.ஆனால் பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது.இந்த சத்து தான் வைட்டமின் ஏ வாக மாற்றப்படும்.

பதினெட்டு வகையான சத்துக்களை கொண்ட ஒரே பழம் இந்த பப்பாளி பழம்.
பப்பாளியில் உட்புறத்தில் இருக்கும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள சதை மிகவும் சுவைமிகுந்தது மற்றும் சத்தானதும் கூட.
கண் பார்வை நன்றாக இருக்க, ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்றால் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் பழம் பப்பாளி பழம் தான்.ஏனெனில் பப்பாளியில் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
பப்பாளியின் பூர்வீகம் எந்த நாட்டை சேர்ந்தது?
இந்தியாவில் அதிகமாக விளையும் பப்பாளியை பலர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது என்று நினைக்கிறார்கள்.ஆனால் இது மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டது.மேலும் தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவலாக கிடைக்கிறது.
ஏன் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது?
அனைத்து காலத்திலும் எளிதாக கிடைப்பதால் இது ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.
பப்பாளியின் தாவரவியல் பெயர்?
carica papaya
Papaya benefits:
முகம்பொலிவு பெற:
பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி முகத்தில் வைக்க முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
தேள் கடிக்கு:
தேள் கடித்த இடத்தில் பப்பாளி விதைகளை அரைத்து வைக்க உடலில் நச்சுத்தன்மை ஏறாமல் தடுக்கப்படும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடலாமா?



சர்க்கரை வியாதிகள் உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு இருப்பது போல் பழங்களை சாப்பிடுவதிலும் கட்டுப்பாடு இருக்கும்.அப்படி சர்க்கரை வியாதி இருப்பவர்களும் இதனை சாப்பிடலாம்.இதை அளவாக சாப்பிடுவதால் எந்த விதத்திலும் சர்க்கரை அளவு அதிகமாகாது.
பப்பாளியில் உள்ள சத்துக்கள்:
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, நார்ச்சத்து, கரோட்டின், ரிபோஃப்ளோவின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தாதுசத்துக்கள் உள்ளன.
பப்பாளி பழத்தின் நன்மைகள் (Papaya benefits) :
தினமும் ஒரு துண்டு பப்பாளி பழத்தினை சாப்பிட்டு வர இதய நோய் வருவது தடுக்கப்படும்.
இதில் உள்ள பால்பைன் எனும் செரிமான நொதி செரிமான பிரச்சினைகளை தீர்க்கும்.
நார்ச்சத்து உடலில் உள்ள அதிகமான கொலஸ்ட்ராலை குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.கரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு கூடும்.இரத்த குழாயில் கொழுப்புகள் படியாமல் தடுக்கும்.
பப்பாளி விதைகள் குடலில் உள்ள புண்களை குணப்படுத்தும்.
பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட நரம்பு தளர்ச்சி வராது.எழும்புகள் வழுவாகும்.
பப்பாளியின் தீமைகள்:
கர்பிணிகள் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் கருப்பை சுருங்கி கரு சிதைவு ஏற்படும்.
இதை அதிகமாக சாப்பிட்டால் அது சிறுநீரக கற்களை உருவாக்கும்.
சுவாச கோளாறு இருப்பவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.