வேர்க்கடலையின் நன்மைகள் மற்றும் பயன்கள்… Verkadalai benefits in Tamil

0
145
Peanut, verkadalai, verkadalai benefits, peanut benefits

Verkadalai benefits in Tamil:

பெரும்பாலானோருக்கு நட்ஸ் (Nuts) என்றாலே பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலையுயர்ந்த கொட்டை வகைகளை தான் கூறுவார்கள்.ஆனால் நமது ஊர்களில் கிடைக்கும் வேர்க்கடலை அவர்களின் நினைவில் வராது.ஏன் தெரியுமா? நட்ஸ் என்றாலே விலை உயர்ந்தது தான் என்ற எண்ணம் உள்ளது.

இப்போதெல்லாம் குழந்தைகள் கூட தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை பார்த்துவிட்டு பாலித்தீன் பைகளில் காற்றினால் அடைக்கப்பட்டு வரும் நொருக்கு திண்பண்டங்களையே விரும்பி உண்கின்றார்கள்.நாம் தான் அவர்களுக்கு கடலை மிட்டாயின் மகத்துவத்தை எடுத்து கூறி சாப்பிட வைக்க வேண்டும்.

பூமிக்கடியில் கனியை வைத்து வெளியே பூவையும், இலையையும் கொண்ட தாவரம் தான் வேர்க்கடலை.

இது தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது.உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது சீனா, இந்தியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

வேர்க்கடலை (verkadalai benefits in Tamil) ஏன் ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது?

முந்திரியில் உள்ள சத்துக்களும் மற்றும் கடலையில் உள்ள சத்துக்களும் ஏறக்குறைய சமமாகவே உள்ளது.

ஆனால் கடலையை விட முந்திரி யின் விலை ஏறக்குறைய 4 மடங்கு முதல் 5 மடங்கு அதிகம்.ஏனவே இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது.

வேர்க்கடலையில் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளதா?

ஒரு சிலர் வேர்க்கடலையில் அதிகமாக கொழுப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.ஆனால் பாதாம் பருப்பை காட்டிலும் வேர்க்கடலையில் கொழுப்பு குறைவாகவே உள்ளது.

வேர்க்கடலையின் வெவ்வேறு பெயர்கள்:

நிலக்கடலை, வேர்க்கடலை, கடலை, கடலைக்காய், மணிலாக்கடலை, கல்லாக்கொட்டை, மல்லாட்டை என்று பல்வேறு ஊர்களில் பல விதமாக அழைக்கப்படுகிறது.

வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள்:

  • வைட்டமின்கள்
  • ரிபோப்ஃளோவின்
  • நியாசின்
  • தயாமின்
  • போலேட்
  • ஃபோலிக் அமிலங்கள்

தாவர வகையான கடலை ஏன் கொட்டை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது?

பீன்ஸ், பட்டாணி போலவே தாவர வகையை சார்ந்தது நிலக்கடலை (verkadalai benefits in Tamil) ஆனால் இதன் ஊட்டச்சத்தினை கணக்கில் கொண்டு இதனை கொட்டை வகையில் சேர்த்துள்ளனர்.

நிலக்கடலையை எப்படி சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும்?

வேர்க்கடலையை நீரில் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்பு அதனை சாப்பிட அதில் உள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

  கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்... Important health benefits of Guava in Tamil

ஆனால் வேகவைப்பதும், வறுப்பதும் அதனுடன் உப்பு சேர்ப்பதாலும் அதில் உள்ள சில சத்துகளை இழக்க நேரிடும்.

வேர்க்கடலையின் நன்மைகள்:

  • இரத்த அழுத்தம் சீராகும்.
  • தாய்ப்பாலை விருத்தி செய்யும்.
  • இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  • சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும்.
  • மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
  • ஞாபக சக்தி கூடும்.
  • பித்தப்பை கற்களை குறைக்கும்.
  • கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
  • மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
  • வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் சத்துக்கள் தேவை.வேர்க்கடலையில் இது அதிகம் உள்ளது.

வேர்க்கடலையின் பயன்கள்:

  • தினமும் 30 கிராம் எடையுள்ள வேர்க்கடலையை எடுத்துக் கொள்ள புற்றுநோய் ஆபத்தை வெகுவாக குறைந்திருப்பதாக அமெரிக்க நிபுணர் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • நிலக்கடலையில் உள்ள நியாசின் அமிலம் ஞாபக மறதி பிரச்சினையை தீர்க்கும்.
  • நிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி சத்து தலைமுடி உதிர்தலை தடுத்து, உதிர்ந்த இடங்களில் உள்ள முடியை மீண்டும் வளர செய்யும்.
  • 30 கிராமுக்கு மேல் கடலை எடுத்துக் கொள்ள உடல் எடை அதிகரிக்க செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here