How to Earn Money from Home in Tamil Nadu
Earn Money from Home in Tamil Nadu:
இந்தப் பதிவில் வீட்டில் இருந்தே ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்தியாவில் தற்போது இந்தக் கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பலரும் வேலையின்மை காரணமாக வீட்டிலேயே இருக்கிறார்கள்.
இப்படி வீட்டில் இருக்கும் மாணவர்கள் அல்லது ஊழியர்கள் தங்களது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இந்தப் பதிவு உங்களுக்கு உதவும்.
தற்போது பலரும் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
பணம் ஆன்லைனில் சம்பாதிக்க படிப்பு, திறமை, வயது மற்றும் முக்கியமாக ஆங்கிலம் தேவை என்று நினைக்கிறார்கள்.
இப்போதைய கால கட்டத்தில் laptop அல்லது Mobile இவை இல்லாதவர்களைப் பார்ப்பது அரிது.
லேப்டாப் இல்லாவிட்டாலும் Mobile இருந்தால் போதும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்.
இந்தச் சமயத்தில் இந்தியாவில் கூகுள் இணைய தேடலில் Earn money from home என்பதே அதிகமாகத் தேடப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பல மோசடி நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் வலை விரிக்கின்றன.
தங்கள் நிறுவனத்தில் சேர பணம் கட்ட வேண்டும்.பிறகு 10 பேரைச் சேர்க்க வேண்டும் என்று கூறும் நிறுவனங்கள் முற்றிலும் போலியானவை.
இந்த நிறுவனங்கள் நீண்ட காலங்களுக்குச் செயல்படுவதில் ஒரு சில மாதங்களில் மூடிவிட்டு ஓடி விடுவார்கள்.
சிலர் ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.இந்த விளையாட்டுகளில் அதிக நேரம் விளையாடினாலும் குறைவான பணமே கிடைக்கும்.
ஆனால் இப்பதிவில் உள்ள பணம் சம்பாதிக்கும் வழிகளைப் பின்பற்றினால் ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குள் நன்றாகச் சம்பாதிக்கலாம்.இந்த முறைகளை முழுநேர வேலையாகச் செய்யலாம்.
நாம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் நேரத்தைவிடக் குறைவான நேரம் வேலை செய்தால் மட்டும் போதும்.குறைந்தபட்சம் மாதம் 10,000 முதல் 20,000 வரை சம்பாதிக்கலாம்.
- YouTube
- Blogger
- Sell photos
- Content writing
- Fiverr
- Earnkaro
- Teaching
#Earn money from YouTube:

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்த ஓரிரு நாட்களில் பலர் யூடியூப் சேனல்கள் தொடங்கிவிட்டனர்.
யூடியூப் கூகுளின் இலவசமான தளம் இதைப் பயன்படுத்தி ஏற்கனவே பலர் சம்பாதித்து வருகின்றனர்.
நீங்களும் யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்துத் தற்போது அதிகம் தேடப்படுவது Food cooking, Entertainment, trending வீடியோ உள்ள சேனல்கள் அதிக பார்வையாளர்களைப் பெற்று வருகிறது.
இதை நீங்கள் உங்களுடைய Mobile வைத்தே எடிட்டிங் செய்து யூடியூப் சேனல்களில் பதிவேற்றலாம்.
பின்பு உங்களுடைய சேனல் யூடியூப்பின் விளம்பரங்களுக்குத் தகுதியானவுடன் வீடியோக்களின் இடையே விளம்பரம் செய்து அதன் மூலம் உங்களுக்குப் பணம் கிடைக்கும்.
#Earn Money from Home for blogger:

இதுவும் கூகுளின் இலவசமான தளம் தான்.நீங்கள் யூடியூப் சேனலில் பதிவேற்றும் வீடியோவில் உள்ளதை எழுதிப் பதிவேற்றலாம்.
நீங்கள் பதிவேற்றியதை கூகுளில் அதிகமான பார்வையாளர்கள் தேடப்பட்டு பதிவைப் படித்தால் உங்களுடைய blogger க்கு கூகுள் தரப்பிலிருந்து விளம்பரங்கள் வழங்கும்.
Earn money for Blogger in Tamil
இந்த விளம்பரங்களை உங்கள் பதிவுகளைப் படிப்பவர்கள் பார்ப்பதாலும் அதை க்ளிக் செய்வதாலும் கூகுள் பணம் கொடுக்கும்.
உங்களுடைய பதிவுகளுக்கு அதிக பார்வையாளர்களைப் பெற பேஸ்புக் இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பக்கத்தை ஆரம்பித்து அதில் share செய்யலாம்.
#Earn Money from sell photos:

உங்களிடம் DSLR கேமிரா உள்ளதா? அல்லது நல்ல கேமிரா வசதியுள்ள Mobile உள்ளதா? உங்களுக்காகப் பதிவு இது.
நீங்கள் போட்டோ எடுத்து அதனை ஒரு சில website களில் பதிவேற்றுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சம்பாதிக்கலாம்.
- Alamy
- Shutterstock
- iStock photo
- Photoshelter
- Adobe stock
- Smugmug
- Can stock photo
- 123RF
- Dreams time
- FineArtAmerica
- Snapped4u
- Fotomoto
- Stocksy
- EyeEm
#Earn money from content writing:

நீங்கள் கட்டுரை எழுதுவதில் சிறந்தவரா உங்களுக்காகப் பணம் சம்பாதிக்கும் தளம் இது.
இதில் நீங்கள் நல்ல தரமான கட்டுரைகளை மூன்று விதமான வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
குறைந்தது 10 நிமிடங்கள் படிக்கும் அளவுக்கு உங்களுடைய கட்டுரை இருக்க வேண்டும்.
உங்களுடைய கட்டுரைகளை அதிகமான பார்வையாளர்கள் படிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
#Earn money from Fiverr:

இந்த Fiverr இணையதளம் உங்களுக்குத் தேவையான சேவையை வழங்கும் மற்றும் பெற்றுக் கொள்ளும் ஆன்லைன் சந்தையிடம்.
Fiver ல் ஒரு சேவைக்குக் குறைந்தது 3 டாலர்கள் வரை கிடைக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும் சிலருக்கு வீடியோ எடிட்டிங் தெரிந்திருக்கும் ஒரு சிலருக்கு போட்டோ எடிட்டிங் தெரிந்திருக்கும் இந்த வேலைகளை fiverr இணைய தளத்தில் செய்து கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
நான் ஒரு எளிமையான வழி சொல்கிறேன்.Fiverr இணைதளத்தில் மொழிபெயர்புக்கு 3 முதல் 10 டாலர்கள் வரை கிடைக்கும்.அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தது 3 டாலர்கள் சம்பாதிக்கலாம்.
நீங்கள் உங்களுடைய தாய் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு Google translate உதவியுடன் மொழிபெயர்த்துக் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
#Earn Money from Earnkaro:

இது மிகவும் எளிமையான பணம் சம்பாதிக்கும் வழி என்று நான் உங்களுக்கு நான் கூறுவேன்.
இதில் நீங்கள் இந்த Earnkaro appஐ பதிவிறக்கம் செய்து Register செய்து கொள்ள வேண்டும்.
Earnkaro வில் amazon, flipkart, mintra, Ajio, udemy போன்ற பல partnership உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த செயலில் உள்ள பொருட்களை நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட link ஐ க்ளிக் செய்து வாங்க வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
உங்களுடைய லிங்க் மூலம் பொருட்களை வாங்குவதால் அதன் விலைஅதிகரிக்காது.
இணையதளத்தில் தளத்தில் வாங்கினாலும் அதே விலை தான் இருக்கும்.
மாறாக உங்களுடைய லிங்க் மூலம் வாங்கும் பொருட்களுக்குப் புரோக்கர் கமிஷன் போல உங்களுக்கு இந்த Earnkaro பணம் கொடுக்கும்.
நீங்கள் உங்களுக்கென ஒரு சமூக வலைதளங்களைத் துவங்கி அதில் share செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
இவ்வாறு அந்த ஒவ்வொரு பொருளின் விற்பனையிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் உங்களுடைய wallet க்கு அனுப்பப்படும்.
பின்பு அதை உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
#Earn Money from Teaching:

பலர் இந்தக் கொரோனா ஊரங்கிற்கு முன் பள்ளியில் ஆசிரியர் ஆகவோ கல்லூரியில் பேராசிரியர் ஆகவோ பணிபரிந்திருக்கலாம் அவர்கள் தற்போது யூடியூப் சேனல்கள் அல்லது வெப்சைட் மூலமாகப் பணம் சம்பாதிக்கலாம்.
மேலும் வேதாந்து இணைய தளத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மாதம் 10,000 முதல் 75,000 வரை சம்பாதிக்கலாம்.
vedandu.com
#Earn Money from Book writting:

மேலே கூறியதை விட அதிகமாக இதில் நீண்ட காலங்களுக்குப் பணம் கிடைக்கும்.நீங்கள் ஒரு நல்ல தரமான Book ஐ எழுதிவிட்டால் 10 தலைமுறைக்கு அந்தப் புக் சம்பாதித்து கொடுக்கும்.
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்று கிடைக்கும் புத்தகத்தை ஒரு நல்ல தரமான புத்தகம் சம்பாதித்து கொடுத்துவிடும்.
புத்தகம் எழுதுவது முன்பு போலக் கடினமான காரியம் அல்ல விஞ்ஞான வளர்ச்சி அதை மாற்றி விட்டது.
ஒரு சராசரியான book 1 முதல் 3 மாதங்களுக்குள் எழுதிவிடலாம் பின்பு அதை Amazon kindle ல் பதிவேற்றம் செய்தால் மாதம் உங்களுடைய வங்கி கணக்கிற்கு பணம் வந்துவிடும்.
Earn money from home for my opinion:
என்னதான் சுலபமான வழிகளாய்இருந்தாலும் உங்களுடைய உழைப்பு என்பது ரொம்ப முக்கியம்.
உழைக்காமல் பணம் சம்பாதிக்கலாம் நினைத்துப் பலர் பலர் தவறான வழிகளில் சென்று 3 மாதங்களில் தெருவிற்கு வந்தவர்கள் பலரை நான் பார்த்துள்ளேன்.
இந்த அனைத்து Earn money from home வழிமுறைகளையும் உங்களுடைய Mobile மூலமாக வேலை செய்யலாம்.
இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.மேலே ஆகியவற்றில் சந்தேகம் இருப்பின் கீழே உள்ள கமெணட் மூலம் தெரியப்படுத்தலாம்.
இதை யாருக்கு பயனுள்ளதாக இருக்குமோ அவர்களுக்கு share செய்யுங்கள்.
I’m still learning from you, as I’m trying to achieve my goals. I absolutely love reading all that is posted on your site.Keep the tips coming. I enjoyed it!