இந்த செய்தி உங்களுக்கு ஜப்பான் நாட்டை பற்றிய மிகவும் சுவாரசியமான விஷயங்கள் (most interesting facts about Japan in Tamil) பற்றி தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

6500-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது தான் ஜப்பான்.இதன் தலைநகர் டோக்கியோ.அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் 10-வது இடத்தில் ஜப்பான் உள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 21% பேர் 60 வயதினருக்கும் மேற்பட்டவர்கள்.100 வயதை கடந்தவர்கள் 50,000-க்கும் மேல் உள்ளனர்.
உலகில் மற்ற எந்த நாட்டிலும் ஜப்பான் என்று கேட்ட உடனே அவர்களுடைய ஞாபகத்திற்கு வருவது அந்த நாட்டில் தயாரிக்கப்படும் பொருளின் தரம் (Quality) தான்.
மேலும் ஜப்பானியர்கள் கடின உழைப்பிற்கு பெயர் போனவர்கள்.எந்த அளவிற்கு என்றால், 1945-ல் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, ஜப்பான் மீது கொண்ட மொத்த கோபத்தையும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டு வீச்சு நடத்தி தீர்த்துக்கொண்டது.
இந்த குண்டுவீச்சில் ஹிரோஷிமாவில் வாழ்ந்த 350,000 பேரில், 140,000 பேர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. நாகசாகியில் குறைந்தது 74 ஆயிரம் பேர் மாண்டதாகத் தெரிகிறது.
இதன் பிறகு உலகமே, ஜப்பான் மீண்டு எழுந்து வர வாய்ப்பே இல்லை என்று நினைத்த போது 1964-ல் உலகமே கண்டு வியக்கும் அளவுக்கு மணிக்கு 210km/hr வேகத்தில் செல்லும் புல்லட் இரயிலை அறிமுகப்படுத்தினார்கள்.அதுமட்டுமல்லாமல் அன்றிலிருந்து இன்றுவரை எந்தவித உயிரிழப்பு இல்லாமல் இயக்கியும் வருகிறார்கள்.
ஜப்பான் நாட்டை பற்றிய மிகவும் சுவாரசியமான விஷயங்கள் ( most interesting facts about Japan in Tamil):
நம் நாட்டில் மோட்டார் சைக்கிளுக்கு பதிவெண் வாங்குவது போல் ஜப்பானில் மிதிவண்டிகளுக்கு (Bicycle) பதிவெண் வாங்க வேண்டும்.அதை ஓட்டுவதற்கு உரிமமும் பெற வேண்டும்.மேலும் 16 வயதிற்குட்பட்டவர்கள் அதை ஓட்டினால் தலைகவசம் (Helmet) அணிய வேண்டும்.
நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாக கைகூப்பி வணங்கி கொள்வோம் அதே போல் மேற்கத்திய நாடுகளில் கை குலுக்கி கொள்வார்கள்.ஆனால் ஜப்பான் நாட்டில் தலைகுனிந்து வணங்குவார்கள்.

உலகத்திற்கே புல்லட் இரயில் வைத்திருக்கும் நாடு ஜப்பான் என்று தெரியும்.ஆனால் அதனுடைய தாமத நேரம் மிகவும் குறைவு.
எந்த அளவு என்றால் அங்கு இரயில் தாமதமாக வந்துவிட்டால் அந்த இரயில்களில் வந்தவர்களுக்கு ஒரு Cirtificate வழங்கப்படும்.அதை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் காண்பித்து கொள்ளலாம்.
ஜப்பானில் மட்டுமே சதுர வடிவில் உள்ள தர்பூசணிகளை பார்க்க முடியும்.

உலகிலேயே அதிக தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ள நாடு ஜப்பான்.
ஜப்பானிய மக்களுக்கு குளிக்கும் போது கூட செல்போன் உபயோகிக்கும் பழக்கம் உள்ளது.எனவே அங்கு விற்பனை செய்யப்படும் செல்போன்களில் 90% Water proof அம்சங்களை கொண்டவை.

ஜப்பானில் சர்வசாதாரணமாக நிலநடுக்கம் ஏற்படும் ஆண்டுக்கு 1500-க்கும் மேல் அதில் ஒன்றிரண்டு தான் அதிகமான சேதங்களை ஏற்படுத்தும்.
ஜப்பானியர்கள் 4 எண்ணை அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாக கருதுகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் Cartoon-களில் 60% ஜப்பானில் உருவாக்கப்படுபவை தான்.
ஜப்பான் நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அதனை குறைக்க பெண் குழந்தைகள் பிறந்தால் அதற்கான ஒட்டுமொத்த செலவையும் அரசே ஏற்கும்.

ஜப்பானியர்கள் நாம் சாப்பிடுவதை போல் கையில் சாப்பிட மாட்டார்கள்.மாற்றாக சாப்ஸ்டிக்ஸ் (Chopsticks) எனப்படும் இரண்டு குச்சிகளை பயன்படுத்தி சாப்பிடுவார்கள்.
ஜப்பானில் இரயில் நிலையங்களில் அதிகமாக கூட்டம் வரும் நேரங்களில் Train Pushers என்று அழைக்கப்படும் நபர்கள், வாசலில் வெளியில் இருப்பவர்களை தள்ளி கதவினை மூட உதவிசெய்வார்கள்.
பள்ளிகளை சுத்தம் செய்ய ஆட்களை வைத்திருப்பதில்லை அங்கு படிக்கும் மாணவர்களையே சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள்.
நம் ஊரில் பூனை குறுக்கே போனால் அபசகுணம் என்று கூறுவார்கள்.ஆனால் ஜப்பானில் கருப்பு நிறத்தில் உள்ள பூனைகளை விரும்பி வளர்க்கிறார்கள்.
ஜப்பானில் பொது இடங்களில் புகை பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.எனவே அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே புகை பிடிக்க வேண்டும்.
ஜப்பான் நாட்டை பற்றி உங்களுக்கு பிடித்த கருத்துகளை கீழே கமெண்டில் தெரிவிக்கவும்…👇