சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி!!!

siva

IPL 2023: KKR vs CSK கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது!!!

ஐ.பி.எல் 2023 -ன் 33வது போட்டி கொல்கத்தாவில் உள்ள Eden Gardens மைதானத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை (KKR vs CSK)அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்:

முதலில் களம் இறங்கிய சென்னை அணியின் வீரர்களான ருத்ராஜ் கெய்வாட் மற்றும் டெயின் கான்வே சிறப்பான தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்.

கெய்க்வாட் 35 ரன்களிலும், கான்வே 56 ரன்களிலும், சிவம் துபே 50 ரன்களிலும், ஜடேஜா 18 ரன்களில் ஆட்டம் இலக்க மறுபக்கம் தோனி 2 பந்துகளில் 3 ரன்களிலும்,ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் அடித்து 235 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்:

236 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சுனில் நரைன் மற்றும் ஜெகதீசன் முதல் இரண்டு ஓவர்களுக்குள் தங்களது இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தனர்.

அடுத்ததாக களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களிலும், நிதீஷ் ரானா 27 ரன்களிலும், ஜேசன் ராய் 61 ரன்களிலும், ஆன்ரே ரஸ்ஸல் 9 ரன்களிலும், டேவிட் வைஸ் 1 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

மறுபக்கம் ஆட்டமிலக்காமல் ரிங்கு சிங் 33 பந்துகளில் 53 ரன் எடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா அணி தோல்வியடைந்தனர்.

இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு சென்றது.

கொல்கத்தா அணி பௌலிங்:

கொல்கத்தா அணி தரப்பில் குல்வண்ட் கெஜ்ரோலியா இரண்டு விக்கெட்களையும், சுயாஸ் ஷர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை அணி பௌலிங்:

சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் மகேஷ் தீக்ஷணா தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஆகாஷ் சிங், மோயின் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பத்திரனா தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x