Jio Cinema : IPL-ஐ Free ஆக வழங்க என்ன காரணம் தெரியுமா?

0
66
Jio Cinema, jio, jio telegram, jio Cinema free for ipl, ipl free, watch ipl for free

உலகில் உள்ள ஒவ்வொரு சிறு, பெரு நிறுவனங்களும் தங்களுக்கென ஒரு Marketing Stretegy ஐ பயன்படுத்தி அவர்களுடைய பொருட்களையும் மற்றும் சேவைகளையும் மக்களிடம் கொண்டு சென்று லாபமாக மாற்றிக் கொள்கின்றனர்.

இந்த வகையில் Reliance நிறுவனம் ஒரு புதிய Stretegy ஐ பயன்படுத்துகிறார்கள்.அது தான் இலவசம். Jio, 2016 ஆண்டு இணைய சேவையில் காலடி எடுத்து வைக்கும் போது வேறு எந்த நிறுவனமும் வழங்காத 4G உடன் வந்து இறங்கினார்கள்.

அதுவும் 3 மாதம் இலவசம், பிறகு ஒரு வருடம் இலவசம் என்று ஒரு குறுகிய காலத்திற்குள் கோடிக் கணக்கான பயனர்களை தன் பக்கம் கொண்டுவந்தனர்.இதனை சமாளிக்க முடியாமல் ஒரு சில நிறுவனங்கள் மூடப்பட்டன.மீதம் இருந்த நிறுவனங்கள் ஜியோ கொடுக்கும் விலைக்கு இணைய சேவையை வழங்க ஆரம்பித்தனர்.

இதன் பின்பு ஜியோ ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது சேவை கட்டணங்களை உயர்த்த ஆரம்பித்து விட்டனர்.

why Jio Cinema is offering IPL for free:

Reliance நிறுவனம் தங்களுடைய Jio Telecom -க்கு கொண்டுவந்த அதே யுக்தியை Jio Cinema வைக்கும் பயன்படுத்துகின்றனர்.கடந்த IPL சீசன்களில் போட்டியை காண Hotstar-ல் சந்தா செலுத்தி ஐ.பி.எல் போட்டிகளை காண வேண்டிய சூழல் இருந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் ஒளிபரப்பும் சேட்டிலைட் உரிமத்தை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.20,500 கோடிக்கு ஏலம் எடுத்தது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் இந்தியாவில் 12 மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கடந்த 2022-ல் நடைபெற்ற FIFA World Cup தொடரையும் Jio இலவசமாக Stream செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்தாண்டு குறைந்த கட்டணத்தில் Jio Cinema தனது சேவைகளை வழங்க வாய்ப்பு உள்ளது.

  IPL Schedule 2023 | Match Dates, Team lineups, Captains & Final Match

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here