ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று Chennai Super Kings மற்றும் Gujarat Titans அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 07:30 மணிக்கு பல பரீட்சை நடத்த உள்ளன.
IPL 2023:



Indian Premier league தொடரின் 16வது சீசனில் 10 அணிகளும் இன்று (மார்ச் 31) துவங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்களும் மற்றும் இந்திய நடிகர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.
இந்த 16 வது சீசன் IPL தொடருக்கான இறுதிப்போட்டிக்கு செல்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
இந்த ஐ.பி.எல் தொடரில், 10 அணிகள் இரண்டு குழுக்களாக தலா 5,5 அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு அணி தனது குழுவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறையும், மற்ற குழுவில் உள்ள அணிகளுடன் தலா இரு முறையும் மோத உள்ளன.
இதன் மூலம் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டியில் விளையாடும்.ஒட்டு மொத்தமாக 70 போட்டிகள், மார்ச் 31 முதல் மே 21 தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
இந்த லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணியில் முதல் இரண்டு அணியும் தகுதி சுற்று 1-க்கு போட்டியிடும்.இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
3 மற்றும் 4 இடத்தில் உள்ள அணிகள் எலிமினேட்டரில் போட்டியிடும்.இதில் வெற்றி பெறும் அணி தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணியுடன், தகுதி சுற்று 2-க்கு செல்லும்.
தகுதி சுற்று 2-ல் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.இந்த சீசனின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 28-ஆம் தேதி நடைபெறும்.