நடப்பு ஐ.பி.எல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி
16-வது ஆண்டு IPL போட்டிகள் துவங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் இன்று 38-வது போட்டி Punjab Cricket Association Stadium-ல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களம் இறங்கிய லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற இமாலய இலக்கை அடைந்தது.
மேலும் IPL வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையும் நிகழ்த்தியது.முதல் இடத்தில் 2013 ஆண்டு நடந்த போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணி 263 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளது.
லக்னோ அணி தரப்பில் கே.எல்.ராகுல் 12 ரன்களும், கெய்ல் பேயர்ன் 54 ரன்களும், ஆயுஷ் படோனி 43 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 72 ரன்களும், பூரான் 45 ரன்களும், ஹூடா 11 ரன்களும், குருனால் பாண்டியா 5 ரன்களும் மொத்தம் 257 ரன்கள் அடித்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சாளர்கள் ரபாடா இரண்டு விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன், சாம் கரன் மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்பு 258 அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் 10 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்களிலும், ஷிஹர் தவான் 1 ரன்னிலும், அதர்வா டைய்டு 66 ரன்களிலும், சிகன்டர் ராசா 36 ரன்களும், லிவிங்ஸ்டன் 23 ரன்களும், சாம் கரண் 21 ரன்களும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களும், ஷாருக்கான் 6 ரன்களிலும், அர்ஸ்தீப் சிங் 2 ரன்களும் அடித்தனர்.
ராகுல் சாஹர் மற்றும் ரபாடா எந்த ரன்களும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர்.20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்தனர்.
லக்னோ அணி பந்து வீச்சாளர்கள் யஷ் தாகூர் 4 விக்கெட்டுகளும், நவீன் அல் ஹக் 3 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னோயி 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஸ்டோய்னிஸ் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.