சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி இன்று நடைபெறும் Csk vs GT போட்டியில் பங்கு பெறுவாரா? மாட்டாரா? சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறிய பதில்…
தோனி காலில் காயம்:
ஐ.பி.எல் தொடரின் 16 வது சீசனின் முதல் போட்டி இன்று மாலை 07:30 மணிக்கு அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.4 முறை சாம்பியன் பட்டம் வென்ற Chennai Super Kings அணியும், பங்குபெற்ற முதல் ஆண்டே சாம்பியன் பெற்ற Gujarat Titans அணியும் மோத உள்ளன.
Follow Instagram: 👉 Tamilnadu News Channel
இந்த போட்டிக்காக சென்னை அணி சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சி செய்த போது தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.இதனையடுத்து Csk vs Gt போட்டிக்காக சென்னை அணி அகமதாபாத் சென்றது.
அங்கு மற்ற csk வீரர்கள் பயிற்சி செய்த நிலையில், தோனி காயம் காரணமாக பயிற்சி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் இந்த போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் என்னை பொறுத்தவரை தோனி நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் எனவும், இந்த போட்டியில் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.