IRCTC ன் முக்கிய அறிவிப்பு | Don’t Reservation Tickets Cancel
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதைப் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி யில் முன்கூட்டியே புக் செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய வேண்டாம்???
ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு
கொரோனா உலக அளவில் பெருமளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.
மேலும் இதன் பரவலை தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொரோனா வைரஸின் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருப்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரைவழி, இருப்பு பாதை வழி, மற்றும் வான் வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க்
உலகிலேயே நான்காவது மிகப்பெரிய இரயில்வே சேவை கொண்டு இயங்கி வருகிறது.
நாடு முழுவதும் 65,000 கிலோமீட்டர் நீளம் கொண்ட இருப்பு பாதையைக் கொண்டுள்ளது.தினமும் 20000 மேற்ப்பட்ட இரயில்கள் இயங்கி வருகின்றன.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிதி வருவாயைக் கொடுக்ககூடிய மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம்.
ரிசர்வேசன் டிக்கெட்டுகளின் நிலை
ஐ.ஆர்.சி.டி.சி யில் புக் செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்தால் பணம் பிடித்தம் செய்யப்பட்டது போக மீதமுள்ள தொகை அக்கவுண்டுக்கு சில தினங்களில் திரும்பச் செலுத்தப்படும்.
இந்நிலையில் தற்போது இரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தங்களது டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய வேண்டாம் என்றும் அந்த டிக்கெட்டுகள் அதுவாகவே கேன்சல் செய்யப்படும் என்றும் அதற்குப் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என்றும் ஐஆர்சிடிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் தாங்களாகவே கேன்சல் செய்யும் டிக்கெட்டுகளுக்கு பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.