தமிழகத்தில் பள்ளிகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? தமிழக அரசின் முடிவு என்ன!!!

0
74
Is the day after Diwali a holiday for schools in Tamil Nadu? What is the decision of Tamilnadu government, தீபாவளி, Diwali 2022, Diwali 2023

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் (25.10.22) விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் 25-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை;

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.இதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர்.தமிழக அரசு அக்டோபர் 24-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

ஆனால் தீபாவளி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் மீண்டும் மறுநாள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது என்பது சாத்தியமற்றது.எனவே மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஒரு நாளை ஈடுகட்ட ஒரு சனிக்கிழமை அன்று முழு வேளை நாளாக பள்ளிகளை இயக்கி கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.விரைவில் இதனை தமிழ்நாடு அரசு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  யூடியூப் மூலம் 7 இலட்சம் பேருக்கும் அதிகமாக நபர்களுக்கு கிடைத்த வேலைவாய்ப்பு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here