47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பாக்கெட்டில் அடைத்து விற்க்கப்பட்டு வரும் அரிசி, கோதுமை, கம்பு, ரவை, பருப்பு வகைகளுக்கு 5% GST வரி விதிப்பு செய்து ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்தது.

குறிப்பாக 25 கிலோ வரையிலான பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளுக்கு 5% வரி விதிப்பால் அரிசி மூட்டையில் விலை 50 முதல் 150 ரூபாய் வரை விலை அதிகரித்தது.
எடுத்துக்காட்டாக 25 கிலோ அரிசி மூட்டையின் விலை 1000 எனில் அதற்கு 50 ரூபாய் ஜி.எஸ்.டி சேர்த்து 1050 ஆக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பல இடங்களில் அரிசி விற்பனை பாதிக்கப்பட்டது.மேலும் இந்த 5% வரிக்கு அரிசி உற்பத்தியாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி தொழிளாலர்கள் 5,000க்கு மேற்ப்பட்டோர் ஒரு நாள் வேலை நிறுத்தமும் செய்திருந்தனர்.
5% ஜி.எஸ்.டி வரியை தவிர்க அரிசி ஆலைகளின் தந்திரம்
ஜி.எஸ்.டி வரி விதிப்பை தவிர்க்கும் வகையில் 26 கிலோ அடங்கிய அரிசி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்களின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இதனை எதிர்ப்பவர்கள் அரிசி ஆலை உரிமையாளர்கள் வரி ஏய்ப்பு செய்வதாக கூறும் நிலையில் GST கவுன்சில் அதிகாரிகள் இதனை எந்த வித வரி ஏய்ப்பும் இல்லை இது சட்டபூர்வமானது என்றும் தெரிவித்துள்ளனர்.
அரிசி ஆலைகள் 25 கிலோவுக்கு குறைவானது சில்லறை வணிகம் என்றும் 25 கிலோவுக்கு அதிகமாக உள்ளது மொத்த வியாபாரம் என்று பிரித்துள்ள நிலையில் 5% GST சில்லறை வணிகத்திற்கு மட்டுமே மொத்த வியாபாரத்திற்கு கிடையாது.
எனவே அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜி.எஸ்.டி வரியை தவிர்க்கும் வகையில் 26 கிலோ அரிசி மூட்டைகளை பேக்கிங் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான உங்களுடைய கருத்துகளை கீழே தெரிவிக்கவும்…👇
சுவாரஸ்யமான செய்தி…