UPI மூலம் செய்யும் பண பரிவர்த்தனைகளுக்கு நாளை முதல் 1.1% கட்டணம்!!!

0
46
UPI wallet charges, UPI,

UPI வாலட் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு நாளை (ஏப்ரல் 1) ஆம் தேதி முதல் கட்டணம் வசூல் செய்ய தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) முடிவு செய்துள்ளது.

UPI Charges :

யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு 1.1% கட்டணமாக வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் (National Payments of India) முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துவிட்டது. இதில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டனர்.

இந்த நிலையில், யு.பி.ஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதற்கு தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, உங்கள் மொபைல் வாலட்டில் (Mobile Wallet) இருந்து வியாபாரிகளுக்கு பணம் செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த விதிமுறைகள் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தேசிய பரிவர்த்தனை கழகத்தின் சுற்றறிக்கை கூறுகிறது. எனினும், 2000 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த 1.1% கட்டணம் பொருந்தும்.

அதாவது, நீங்கள் உங்களுடைய மொபைல் வாலட் மூலம் வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும்போது அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டண முறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த கட்டணம் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு லேசான நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்நிறுவனங்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஆதிக்கம் செலுத்தினாலும் கூட, வருவாய் ஈட்ட முடியாமல் திணறி கொண்டு உள்ளன.

மேலும் இந்த கட்டண முறை மொபைல் வாலட்டில் இருந்து பணம் அனுப்பும்போது மட்டுமே வசூலிக்கப்படுமே தவிர, உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  whatsapp-ல் வரவிருக்கும் 7 புதிய update!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here