புதிதாக வாட்சாப்பில் பரவும் புதுவிதமான போலியான மெசேஜ்!!! | Fake Viral Message Spreading on WhatsApp
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும்பாலான மக்களால் வாட்சாப் செயலி பயன்படுத்தப்படுகிறது.என்னதான் வாட்சாப்பில் என்னற்ற பயன்கள் இருந்தாலும் அதே அளவுக்கு தீமைகளும் உள்ளது.ஏன் என்றால் வாட்சாப் செயலியில் போலியான ஒரு மெசேஜ் மிக எளிதாக வைரல் ஆகிவிடும்.
ஒவ்வொரு வகையான காலங்களிலும் அந்த நேரத்திற்கு தகுந்தாற் போல் போலியான வாட்சப் வதந்திகள் வலம் வரும்.எடுத்துக்காட்டாக ஐ.பி.எல் நடக்கும் சமயங்களில் ஒரு மெசேஜில் நெட்வொர்க் நிறுவனங்கள் இலவசமாக டேட்டா வழங்குவதாகவும், ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஒரு நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும்.மேலும் இந்த இலவச சலுகையை பெற 10 பேருக்கு ஷேர் செய்ய வேண்டும் என்று இருக்கும்.
தற்போது இதே போல (Fake Viral message spreading on WhatsApp) ஒரு மெசேஜ் வாட்சப்பில் வலம் வருகிறது.பஞ்சாப் நேஷனல் வங்கி இலவசமாக ரூ.6000 பரிசு தொகை தருவதாக செய்தி வலம் வருகிறது.
Punjab National Bank தனது 130-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாட்சப் பயனர்களுக்கு ரூ.6000 பரிசுத்தொகை வழங்குவதாக போலி செய்தி வைரலாகி உள்ளது.மேலும் இந்த மெசேஜ் உடன் வரும் லிங்கை க்ளிக் செய்து, அதில் கேட்கும் தகவல்களை உள்ளிட வேண்டும்.மேலும் இந்த போலி மெசேஜில் இருக்கும் இணையதளம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதளம் போலவே உள்ளது.
ஆனால் ரூ.6000 பரிசுத்தொகை முற்றிலும் போலி எனவும், இது மோசடி செய்பவர்களின் வேலை எனவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் போலி மெசேஜில் உள்ள லிங்கை க்ளிக் செய்தால் பயனர்களின் சுயதரவுகள் மட்டுமல்லாமல் பணத்தையும் இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எந்த ஒரு நிறுவனமும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பரிசுத்தொகையை வாட்சப் செயலி மூலம் வழங்கமாட்டார்கள் என்பதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.